For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

உலக முதலீட்டாளர்கள் மாநாடு: எரிசக்தி துறையில் ரூ.1,37,000 கோடி மதிப்பில் ஒப்பந்தம்!

03:52 PM Jan 07, 2024 IST | Web Editor
உலக முதலீட்டாளர்கள் மாநாடு  எரிசக்தி துறையில் ரூ 1 37 000 கோடி மதிப்பில் ஒப்பந்தம்
Advertisement

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ. 1 லட்சத்து 37 ஆயிரம் கோடி அளவிற்கு புதுப்பிக்கதக்க வகையில் எரிசக்தி துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாக மின்சாரத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Advertisement

உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில்  இன்றும் நாளையும் நடைபெறுகிறது.  இந்த மாநாட்டிற்கான இலச்சினையை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இந்த மாநாட்டில் தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காக வெளிநாடுகளில் இருந்து ஏராளமான தொழிலதிபர்கள் பங்கேற்றுள்ளனர்.  மேலும், பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாக உள்ளன.  இந்த மாநாட்டையொட்டி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் பல்வேறு அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழ்த்­தாய் வாழ்த்­து­டன் மாநாடு தொடங்­கியது. அதனைத்தொடர்ந்து, தமிழ்­நாடு தொழில்­துறை அமைச்­சர் டி.ஆர்.பி.ராஜா வர­வேற்­புரை ஆற்­றினார். அதன்­பின், முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் உலக முத­லீட்­டா­ளர்­கள் மாநாட்டை தொடங்கிவைத்து உரை­யாற்­றினார்.

இந்த நிகழ்வில் மத்திய தொழில்­துறை அமைச்­சர் பியூஷ் கோயல் சிறப்பு விருந்­தி­ன­ராக பங்­கேற்றார். அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைவுப் பரிசை வழங்கினார்.  இந்த மாநாட்­டில் தொழில்­கள் அடிப்­ப­டை­யி­லான பல்­வேறு தனித்­தனி அமர்­வு­கள் நடத்தப்பட்டன. ஜவுளி, காலணி தொழில்­கள், மின்­சார வாக­னங்­கள் மற்றும் வேளாண் தொழில்­நுட்­பங்­கள் உள்­ளிட்ட பல்­வேறு அமர்­வு­கள் நாளையும் நடத்­தப்­பட உள்­ளன.

இந்த நிலையில் 5.50லட்சம் அளவுக்கு முதலீகளுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த மாநாட்டின் மூலம் 1ட்ரில்லியன் டாலர் அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாநாட்டின் தொடக்கமாக 8 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது.

அத்துடன் ரூ. 1 லட்சத்து 37 ஆயிரம் கோடி அளவிற்கு புதுப்பிக்கதக்க வகையில் எரிசக்தி துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தொடர்பான பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று மேற்கொள்ளப்பட்டன. இதன் மூலமாக 18,420 மெகாவாட் மின் உற்பத்தி கூடுதலாக மேற்கொள்ளப்பட்டதாக மின்சாரத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Tags :
Advertisement