#Rajasthan | ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி 18 மணி நேர போராட்டத்திற்குப் பின் மீட்பு!
ராஜஸ்தான் மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுமி 18 மணி நேரப் போராட்டத்துக்குப் பின் உயிருடன் மீட்கப்பட்டார்.
ராஜஸ்தான் மாநிலம் தவுசா மாவட்டம் ஜோத்புரியாவில் பாண்டூகி என்ற இடத்தில், நேற்று மாலை 6 மணியளவில் 2 வயது பெண் குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. சிறிது நேரம் கழித்து, குழந்தையை காணவில்லை என்பதை அறிந்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். அருகில் 35 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் குழந்தை விழுந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
சிறிது நேரம் போராடியும் எடுக்க முடியாமல் போன நிலையில், தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் நவீன கருவிகள் உதவியுடன் ஆழ்துளை கிணறு அருகே பள்ளம் தோண்டும் முயற்சியில் ஈடுபட்டனர். இரவு முழுவதும் அவரை மீட்குப் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது. 18 மணி நேரமாக மேற்கொண்ட முயற்சியின் பலனாக, இன்று காலை குழந்தையை பத்திரமாக மீட்டனர்.
இதையும் படியுங்கள் :“ஒரே நாடு ஒரே தேர்தல் - நடைமுறைக்கு சாத்தியமற்றது” - முதலமைச்சர் #MKStalin!
இதையடுத்து, மீட்பு படையினருக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். குழந்தை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. குழந்தை உயிருடன் மீட்கப்பட்டதை அறிந்ததும், கிராமத்தினர் மீட்பு படையினருக்கு பாராட்டு தெரிவித்தனர்.