Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சிறுமியை நாய்கள் கடித்த விவகாரத்தில் உரிமையாளர் கைது! அடுத்த நடவடிக்கை என்ன? மாநகராட்சி ஆணையர் விளக்கம்!

01:36 PM May 06, 2024 IST | Web Editor
Advertisement

சிறுமியை நாய்கள் கடித்த விவகாரத்தில் உரிய விசாரணைக்குப் பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். 

Advertisement

சென்னை ஆயிரம் விளக்கு அருகில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சி பூங்காவில் காவலாளியாக பணியாற்றி வருபவர் ரகு.  இவர் தனது மனைவி மற்றும் 5 வயது மகளுடன் பூங்காவில் உள்ள அறையில் வசித்து வருகிறார்.  இந்நிலையில் நேற்று ரகு தனது உறவினர் ஒருவர் இறப்பிற்கு சென்றிருந்தார்.

இதனிடையே நேற்று மாலை பூங்கா அருகே வசிக்கும் புகழேந்தி என்பவர் தான் வளர்க்கும் இரண்டு நாய்களுடன் பூங்காவுக்கு வந்துள்ளார்.  அப்போது பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமியை இரு நாய்களும் கடித்துள்ளன.  சிறுமியின் அழுகுரல் கேட்டு வந்த தாய் சிறுமியை காப்பாற்ற முயன்றுள்ளார்.  அப்போது அவரையும் நாய்கள் கடித்துள்ளன.

நாய்களின் உரிமையாளர் புகழேந்தி,  நாய்களை அங்கேயே விட்டுவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.  நாய்கள் கடித்ததில் பலத்த காயமடைந்த சிறுமியை அருகில் இருந்தவர்கள் மீட்டு ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த ஆயிரம் விளக்கு போலீசார் நாயின் உரிமையாளரான புகழேந்தியை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

சிறுமிக்கு தனது செலவில் சிகிச்சை மேற்கொள்வதாக புகழேந்தி கூறியதையடுத்து சிறுமி ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ குழந்தைகள் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.  அங்கு சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படியுங்கள் : ஐநாவின் யுனிசெப் அமைப்பில் இடம் பெற்றார் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் விஞ்ஞானி வினிஷா உமாசங்கர்!

இந்நிலையில்,  நாய்கள் கடித்து சிறுமி படுகாயம் அடைந்த விவகாரத்தில் நாய்களின் உரிமையாளர் புகழேந்தி,  அவரது மனைவி மற்றும் மகன் ஆகிய 3 பேர் மீதும், 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  மேலும், நாய்களின் உரிமையாளர் புகழேந்தியை ஆயிரம் விளக்கு போலீசார் கைது செய்துள்ளனர்.  சிறுமியை நாய்கள் கடித்த விவகாரம் குறித்து மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்தித்து பேசினார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது : 

"சிறுமியை கடித்த நாய்களுக்கு உரிமையாளர்கள் வளர்ப்பு உரிமம் பெறவில்லை எனத் தெரியவந்துள்ளது. ஏன் உரிமம் பெறவில்லை? எனக்கேட்டு அவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. உ ரிய விசாரணைக்குப் பின்னர் இந்த விவகாரம் தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

தெருவில் திரியும் நாய்களாக இருந்தாலும் அதற்கு இனப்பெருக்க கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து,  மீண்டும் பிடித்த இடத்திலேயே விட வேண்டும் என்பது தான் மாநகராட்சிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  நாய் பூனை போன்ற செல்லப் பிராணிகள் வளர்ப்பவர்கள் கட்டாயம் லைசென்ஸ் பெற வேண்டும்.  வீட்டில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளுக்கு தவறாமல் தடுப்பூசி செலுத்த வேண்டும்"

இவ்வாறு அவர் கூறினார்.

Tags :
#BitearrestedbabyChennaiDogDogbitePoliceradha krishnanThousandLights
Advertisement
Next Article