For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஆல் ஏரியாலயும் ‘கில்லி’ ரீ-ரிலீஸ்... மாஸ் காட்டும் விஜய் ரசிகர்கள்... த்ரிஷாவின் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?

06:14 PM Apr 20, 2024 IST | Web Editor
ஆல் ஏரியாலயும் ‘கில்லி’ ரீ ரிலீஸ்    மாஸ் காட்டும் விஜய் ரசிகர்கள்    த்ரிஷாவின் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா
Advertisement

இன்று கில்லி திரைப்படம் ரீரிலீஸ் ஆனது குறித்து நடிகை த்ரிஷா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisement

நடிகர் விஜய் ‘லியோ’  திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் ‘கோட்’  திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சினிமா வாழ்வில் நடிகர் விஜய்க்கு மிகப்பெரிய திருப்புமுனைத் திரைப்படமாக ‘கில்லி’ அமைந்தது. இயக்குநர் தரணி இயக்கத்தில் உருவான திரைப்படம் 2004 ஏப்ரல் 17-ம் தேதி திரைக்கு வந்தது. படம் வெளியாகி தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

தெலுங்கில் மகேஷ் பாபு நடிப்பில் வெளியான ‘ஒக்கடு’ திரைப்படத்தின் ரீமேக்கான ‘கில்லி’ திரைப்படம், ரூ.50 கோடி வசூலித்த முதல் தமிழ்ப்படம் என்கிற சாதனையைப் படைத்தது. இத்திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைய உள்ளதால், இப்படத்தை மறுவெளியீடு செய்ய தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாகவும் 4K டிஜிட்டல் தரத்தில் மீண்டும் ’கில்லி’ திரைப்படம் மறுவெளியீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

அப்படி போடு, அர்ஜுனரு வில்லு ஆகிய பாடல்கள் இன்றுவரை பலரது விருப்பப் பாடலாக உள்ளது. கில்லி வெளியான போது ஹவுஸ்புல் காட்சிகளுடன் மெகா ஹிட்டானது. இந்நிலையில், இன்று உலகம் முழுவதும் ’கில்லி’ மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் சேர்த்து, இப்படம் கிட்டத்தட்ட 600க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளது.

கில்லி ரீ ரிலிஸ் ஆனதை முன்னிட்டு விஜய் ரசிகர்கள் அனைத்து இடங்களிலும் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி வருகின்றனர்.‌ ஞாயிற்றுக்கிழமை வரை கில்லி திரைப்படம் வெளியாகியுள்ள திரையரங்குகளில் அனைத்து காட்சிகளும் ஹவுஸ் ஃபுல் ஆகியுள்ளன. முதல் நாள் மட்டும் கிட்டத்தட்ட 7 கோடி வரை வசூல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு வசூல் சாதனை படைக்கும் பட்சத்தில், இதுவரை வெளியான ரீ ரிலீஸ் படங்கள் செய்யாத சாதனையாக இது இருக்கும்.

கில்லி ரீரிலீஸ் செய்யப்பட்டது குறித்து த்ரிஷா தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “வாழ்க்கை ஒரு வட்டம். முதல் நாள், முதல் காட்சிக்கு அப்போது இருந்த உற்சாகம் இன்று மீண்டும் கிடைத்துள்ளது” என கூறியுள்ளார்.

Tags :
Advertisement