For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு நாளை செல்ல பக்தர்களுக்கு தடை!

09:58 AM Mar 07, 2024 IST | Web Editor
சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு நாளை செல்ல பக்தர்களுக்கு தடை
Advertisement

அயன்சிங்கம்பட்டி ஸ்ரீ சங்கிலி பூதத்தார் கோயிலில் கொடை விழா நாளை நடைபெற இருக்கும் நிலையில், சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு செல்ல நாளை பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள அயன்சிங்கம்பட்டி சங்கிலி பூதத்தார் கோயிலில் கொடை விழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்நிலையில்.  இந்த ஆண்டுக்கான கொடை விழா மார்ச் 08 ஆம் தேதியான நாளை நடைபெறுகிறது.

இதையும் படியுங்கள் : சிறுத்தையை புத்திசாலித்தனமாக அறையில் அடைத்து வைத்த சிறுவன் | வைரலாகும் வீடியோ!

ஆண்டுதோறும் மகா சிவராத்திரியையொட்டி அன்று காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலில் இருந்து சங்கிலி பூதத்தார் கோயிலுக்கு சங்கிலி எடுத்தும் செல்லும் நிகழ்ச்சியானது காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி வரை பாரம்பரியமாக நடந்து வருகிறது.  அன்றைய தினம் சங்கிலி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகின்ற நேரத்தில் கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

இதையடுத்து,  நாளை மகா சிவராத்திரியையொட்டி  காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலில் இருந்து சங்கிலி பூதத்தார் கோயிலுக்கு சங்கிலி எடுத்தும் செல்லும் நிகழ்ச்சியானது காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி வரை நடைபெற உள்ளது.  இதனால்,  நாளை காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி வரை சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  மேலும்,மதியம் 2.30 மணிக்கு மேல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என கோயில் செயல் அலுவலர் முருகன் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement