குழாயிலிருந்து விழும் பிரம்மாண்ட நீர்வீழ்ச்சி | அம்பலமான உண்மை; கடுப்பான சுற்றுலாப் பயணிகள்!
சீனாவின் மிக உயரமான நீர்வீழ்ச்சி எனப் பெயர்பெற்ற யுன்டாய் மலை நீர்வீழ்ச்சியில் குழாய் மூலம் நீர் கொட்டப்படுவது போன்ற காட்சியைக் கொண்ட சமீபத்திய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
சீனாவில் உள்ள யுனாடாய் நீர்வீழ்ச்சி மிகவும் பிரபலமானதாக கருதப்படுகிறது. ஆனால் அந்த நீர்வீழ்ச்சி தற்போது ஒரு குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளது. இயற்கை எழில் கொஞ்சும், கண்ணை கவரும் அந்த அருவி செயற்கையானது என்றும், குழாய்கள் அமைத்து அருவியில் நீர் பாய்ச்சப்படுகிறது என்றும் கூறப்படுகிறது. டிக் டாக்கர் ஒருவர் வெளியிட்ட ட்ரோன் காட்சிகள் மூலம் இந்த உண்மை அம்பலமாகியுள்ளது.
இந்த வீடியோ வெளியாகி வைரலான நிலையில், அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர். இது குறித்து பேசிய அதிகாரிகள், நீர்வீழ்ச்சியில் குழாய்கள் அமைத்து தண்ணீர் பாய்ச்சப்படுவதை ஒப்புக்கொண்டுள்ளனர். அதுமட்டுமன்றி அதற்கான விளக்கத்தையும் அளித்துள்ளனர்.
கோடைக்காலத்தில் வறட்சியாக இருக்கும் சூழலில் நீர்வீழ்ச்சி வரண்டுவிடாமல் பாதுகாப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்துவிடாமல் இருக்கவும் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.
நீர்வீழ்ச்சியின் அழகு காலநிலை மாற்றம் காரணமாக குறைந்துவிடக்கூடாது என்பதற்காகவே இது பின்பற்றப்படுகிறது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கோடையில் நீர்விழ்ச்சி அதன் இயல்பு நிலைக்கு திரும்பும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Made in China waterfall. Yes, it is also fake, like many other Chinese products 😂 pic.twitter.com/ongrkQvpBD
— Meme Farmer (@craziestlazy) June 7, 2024