For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

வெங்காயங்களால் அலங்கறிக்கப்பட்ட பிரம்மாண்ட சாண்டா கிளாஸ்  - இணையத்தில் வைரல்!

08:19 AM Dec 25, 2023 IST | Web Editor
வெங்காயங்களால் அலங்கறிக்கப்பட்ட பிரம்மாண்ட சாண்டா கிளாஸ்    இணையத்தில் வைரல்
Advertisement

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெங்காயங்களை கொண்டு அலங்கறிக்கப்பட்ட பிரம்மாண்ட சாண்டா கிளாஸின் மணற்சிற்பம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

இயேசு கிறிஸ்து பிறந்த தினமான இன்று (டிச.25) கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஒடிசா மாநிலத்தில் உள்ள பூரி கடற்கரையில் பிரம்மாண்ட சாண்டா கிளாஸ் மணற்சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது.  இந்த சிற்பத்தை பிரபல மணற்சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் வெங்காயங்களைக் கொண்டு  உருவாக்கியுள்ளார்.

இதையும் படியுங்கள்: அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு – கடந்த 24 மணி நேரத்தில் 656 பேருக்கு தொற்று உறுதி!

அவர் இதற்காக சுமார் 2 டன் வெங்காயங்கள் பயன்படுத்தப்பட்டதாக கூறியுள்ளார்.  இவரின் இந்த சிற்பம், இந்தியாவின் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது.  இது குறித்து சுதர்சன் பட்நாயக் கூறுகையில், "ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது பூரி கடற்கரையில் வித்தியாசமான முறையில் மணற்சிற்பங்களை உருவாக்க முயற்சி செய்வோம்.

அந்த வகையில் இந்த ஆண்டு சுமார் 2 டன் வெங்காயங்களைக் கொண்டு உலகின் மிகப்பெரிய சாண்டா கிளாஸ் மணற்சிற்பத்தை உருவாக்கியுள்ளோம்.   இந்த சிற்பம் 100 அடி நீளமும், 20 அடி உயரமும், 40 அடி அகலமும் கொண்டுள்ளது.  மரங்களை வளர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வெங்காயத்தைப் பயன்படுத்தி இந்த மணற்சிற்பத்தை உருவாக்கியுள்ளோம்." என்று அவர் தெரிவித்தார்.

Tags :
Advertisement