சீன புத்தாண்டுக்காக பலூன்களில் செய்யப்பட்ட ராட்சத டிராகன் | உலக சாதனை படைத்து அசத்தல்...!
சீனப் புத்தாண்டைக் கொண்டாடும் வகையில் பலூன்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ராட்சத டிராகன் சிலையின் காணொளி ஒன்று மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
சீன புத்தாண்டை முன்னிட்டு ஹாங்காங்கில் உள்ள ஷாப்பிங் மாலில் 2 கலைஞர்களால் உருவாக்கப்பட்ட "டிராகனின் மிகப்பெரிய பலூன் சிற்பம்" குறித்த வீடியோவை கின்னஸ் உலக சாதனைகள் (GWR) சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளது.
ராட்சத டிராகன் பலூன் மாஸ்டர்களான Sze Tai Pang aka 'Wilson' மற்றும் Kun Lung Ho ஆகியோரால் ", பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் உட்பட 60 நபர்கள்" உதவியுடன் இந்த ராட்சத டிராகன் சிலை உருவாக்கப்பட்டது. இதற்காகச் சிற்பத்திற்காகத் தோராயமாக 38,000க்கும் ரப்பர் பலூன்களைப் பயன்படுத்தினார். பார்வையாளர்களுக்குச் சிறந்த காட்சியைக் கொடுப்பதற்காக டிராகன் மாலின் கூரையிலிருந்து தொங்கவிடப்பட்டது.
சீன புத்தாண்டு சந்திர நாட்காட்டியின் படி கொண்டாடப்படுவதால், நேற்றைய தினமே சினாவில் புத்தாண்டு கொண்டாடப்பட்டது. இந்த திருவிழா பொதுவாக 15 நாட்கள் நீடிக்கும் மற்றும் மக்கள் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு மரபுகளைப் பின்பற்றுகிறார்கள். குடும்பங்கள் தங்கள் வீடுகளை அலங்கரித்து, பட்டாசு வெடித்து, சிவப்பு உறைகளில் பரிசுகளைப் பரிமாறிக் கொள்கிறார்கள். சீன ஜோதிடத்தில், ஒவ்வொரு ஆண்டும் ஒரு மிருகத்தை மதிக்கிறார்கள். சீன ராசியின் படி, 2024 டிராகன் ஆண்டாக கொண்டாடப்படுகிறது, அடுத்த ஆண்டு, 2025, பாம்புகளின் ஆண்டாக இருக்கும்.