குடையை ரெடியா வச்சிக்கோங்க… 5 மாவட்டங்களில் கொட்ட போகும் கனமழை!
தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் 20ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையும் படியுங்கள் : ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்திலிருந்து ‘Kissa 47’ பாடல் நீக்கம்?
அதன்படி, நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது. தொடர்ந்து, நாளை ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர் மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
17.05.2025 : தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் காரைக்கால் பகுதிகளில்கனமழைக்கு வாய்ப்புள்ளது.
18.05.2025 : தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.