For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“உளவியல் பரிசோதனைக்கு உத்தரவிடக் கோரிய வழக்கு” | இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

02:28 PM Jan 04, 2024 IST | Web Editor
“உளவியல் பரிசோதனைக்கு உத்தரவிடக் கோரிய வழக்கு”    இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
Advertisement

உளவியல் பரிசோதனைக்கு உத்தரவிடக் கோரிய வழக்கில் இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. 

Advertisement

வன்முறையை தூண்டும் காட்சிகளை படமாக்குவதாக லோகேஷ் கனகராஜுக்கு எதிராக வழக்கு நேற்று வழக்கு தொடரப்பட்டது.  மேலும் லோகேஷ் கனகராஜுக்கு உளவியல் பரிசோதனை செய்ய வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டு இருந்தது.

நேற்று இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து இன்று வழக்கை விசாரித்த நீதிமன்றம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தரப்பில் பதிலளிக்க மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது படங்களில் அதிக வன்முறை காட்சிகள் மற்றும் போதை மருந்தை பயன்படுத்துவது போன்ற காட்சிகளை படமாக்கி வருவது குறித்து சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement