ஒடிசா பழங்குடி மக்களின் உணவான எறும்பு சட்னிக்கு புவிசார் குறியீடு!
ஒடிஸா மாநிலத்தில் வசிக்கும் பழங்குடியின மக்களின் விருப்ப உணவான சிவப்பு எறும்பு சட்னிக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
உலகில் பல நாடுகள் பூச்சிகளை உணவாக உண்ணுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
அந்தவகையில், ஒடிஸா மாநிலத்தில் வசிக்கும் பழங்குடியின மக்கள் விரும்பி உண்ணும் உணவாக சிவப்பு எறும்பு சட்னி உள்ளது. இந்த சட்னி நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் சுறுசுறுப்பை அதிகரிப்பதாக உதவுவதாக கூறப்படுகிறது. எறும்புகள் சுத்தம் செய்யப்பட்டு உப்பு, இஞ்சி, பூண்டு, மிளகாய் கலவையை அரைத்து சட்னி தயாரிக்கப்படுகிறது.
ஜார்க்கண்ட் மற்றும் சத்தீஸ்கர் போன்ற கிழக்கு மாநிலங்களிலும் இந்த சிவப்பு எறும்பு சட்னி பிரபலமாக உள்ளது. புரதம், கால்சியம், துத்தநாகம், வைட்டமின் பி-12, இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற ஊட்டச் சத்துக்கள் இதில் அதிகமாக உள்ளது. இந்நிலையில், மத்திய அரசின் தொழில் மற்றும் வர்த்தக துறை இந்த சட்னிக்கு புவிசார் குறியீடு வழங்கியுள்ளது.