Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

INDIA கூட்டணியின் பொதுக்கூட்டம் - மும்பை புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

10:59 AM Mar 17, 2024 IST | Web Editor
Advertisement

INDIA கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மும்பை புறப்பட்டார்.

Advertisement

நாட்டின் கிழக்கில் இருந்து மேற்கு வரை ராகுல் காந்தியின் இரண்டாம் கட்ட நடைபயணமான ‘இந்திய நீதி பயணம்’ கடந்த ஜன. 14-ம் தேதி மணிப்பூரில் தொடங்கியது. இந்த நடைபயணம் நாட்டின் கிழக்குப் பகுதியில் தொடங்கி 63 நாட்கள் நடைபெற்ற இந்த பயணம் 14 மாநிலங்களை கடந்து மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நிறைவுற்றதாக நேற்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மும்பை சிவாஜி பூங்காவில் இன்று மாலை (மார்ச் - 17) I.N.D.I.A. கூட்டணி  கட்சிகளின் பொதுக்கூட்டத்துக்கு காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ளது. இந்த கூட்டத்தில் I.N.D.I.A.  கூட்டணியில் உள்ள கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : துப்பறிவாளன் 2 படத்தின் அப்டேட்! -இயக்குநராக மாறி விஷால்?

இந்திய ஒற்றுமை நீதிப் பயணத்தின் நிறைவையொட்டி, நடைபெறும் பொதுக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ், மகாராஷ்டிர முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

இந்நிலையில், அதில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மும்பை புறப்பட்டார். மும்பையில் இன்று மாலை  நடைபெறும்  நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு இன்று இரவே முதலமைச்சர் மும்பையில் இருந்து புறப்பட்டு சென்னை திரும்ப உள்ளார்.

Tags :
BharatJodoNyayYatraCongressMKStalinMumbaiRahulGandhi
Advertisement
Next Article