Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பொதுப்பிரிவு பொறியியல் கலந்தாய்வு தொடங்கியது: முதல்சுற்றில் 30,264 மாணவர்கள் கலந்து கொள்ள தகுதி!

10:34 AM Jul 29, 2024 IST | Web Editor
Advertisement

பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடங்கியது. 

Advertisement

2024-25-ம் கல்வியாண்டிற்கான பொறியியல் கலந்தாய்வில் 433 கல்லூரிகளில் உள்ள 2,33,376 பிஇ, பிடெக் இ்டங்களில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.இதில் அரசு ஒதுக்கீட்டு இடங்களாக 1,79,938 இடங்கள், கலந்தாய்வின் மூலம் நிரப்பப்படவுள்ளன. அதன்படி, தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு கடந்த மே மாதம் 6ஆம் தேதி தொடங்கி ஜூன் மாதம் 12 ஆம் தேதி வரை நடைபெற்றது. மொத்தம் 2,53, 954 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், 1,99, 868 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, தரவரிசை பட்டியல் ஜூலை 10 ஆம் தேதி வெளியிட்டப்பட்டது.

தொடர்ந்து ஜூலை 25-28 ஆம் தேதி வரை நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், மற்றும் முன்னாள் ராணுவத்தினர் வாரிசுகள் ஆகியோருக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வில், 9,547 இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெற்றது. அதில் முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் பிரிவில் 1,243 மாணவர்களும், விளையாட்டு வீரர்கள் பிரிவில் 2,113 மாணவர்களும், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 416 மாணவர்களும் என 3,772 மாணவர்கள் கலந்து கொண்டனர். இவர்களில் 744 மாணவர்கள் இறுதி ஒதுக்கீட்டு ஆணையை பெற்றுள்ளனர்.

இதையும் படியுங்கள் :செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் பணியாளர்களின் உரிமைகள் பாதிக்கப்படக்கூடாது - மாநிலங்களவையில் மசோதா தாக்கல்!

இந்நிலையில், பொறியியல் பொதுப் பிரிவு கலந்தாய்வின் முதல் சுற்று இன்று தொடங்கியது. தரவரிசை எண் 1 முதல் 26,654 வரை மாணவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். பொதுப்பிரிவில் அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்து பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்து 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் வரும் மாணவர்கள் முதல் சுற்று கலந்தாய்வில் 1,343 மாணவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். கட்-ஆஃப் மதிப்பெண் 200 -179.00 வரை உள்ள மாணவர்கள் தங்களுக்கான விருப்பக் கல்லூரிகளை தேர்வு செய்வர்.

அதேபோல் பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பித்து தகுதிபெற்றுள்ள தொழிற்கல்வி மாணவர்கள் 2,267 பேருக்கு மொத்தமாக ஒரே சுற்றாக கலந்தாய்வு நடைபெறுகிறது. அதன்படி, முதல் சுற்றில் இன்று காலை 10 மணி முதல் ஜூலை 31 ம் தேதி மாலை 5 மணி வரை மாணவர்கள் விருப்பக் கல்லூரிகளை தேர்வு செய்யலாம்(Choice filling). 3 நாள் கால அவகாசத்தில் மாணவர்கள் கொடுத்துள்ள விருப்பப்பட்டியிலின் அடிப்படையில் அவர்களுக்கான தற்காலிக இடம் பொறியியல் மாணவர் சேர்க்கை குழுவால் ஒதுக்கீடு செய்யப்படும். ஆகஸ்ட் ஒன்றாம் தேதி காலை 10 மணி முதல் இரண்டாம் தேதி மாலை 5 மணிக்குள் மாணவர்கள் அவர்களுக்கான தற்காலிக இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும்.

மாணவர்கள் இறுதி செய்த ஒதுக்கீட்டு இடங்களின் அடிப்படையில் மாணவர்களுக்கான இறுதி ஒதுக்கீட்டு ஆணை ஆகஸ்ட் 3ம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும். ஆகஸ்ட் 3ம் தேதி முதல் 7ம் தேதி மாலை 5 மணிக்குள் இடங்களை இறுதி செய்து ஒதுக்கீட்டு ஆணை பெற்ற மாணவர்கள், கல்லூரிகளில் சென்று சேரலாம். அதேவேளையில் Confirm & Upward கொடுத்த மாணவர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மாணவர் சேர்க்கை உதவி மையங்களுக்கு சென்று கடிதத்தை கொடுத்து கட்டணத்தை செலுத்தி இடங்களை உறுதி செய்யலாம். அவர்களுக்கு அதைவிட நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்போது அவை தானாக ஒதுக்கீடு செய்யப்படும். இந்த இரண்டு வாய்ப்புகளையும் அல்லாது அடுத்த சுற்றுக்கு செல்வதற்கு ஒப்புதல் கொடுத்த மாணவர்கள் அடுத்த சுற்றில் கலந்து கொள்வர்.

அதேபோல் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ், விண்ணப்பித்து கலந்தாய்விற்கு தகுதி பெற்றுள்ள மாணவர்களுக்கு விருப்பக் கல்லூரியை தேர்வு செய்ய இரண்டு லிங்க் கொடுக்கப்பட்டிருக்கும். அதன்படி பொதுப் பிரிவில் தனியாகவும், 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் விருப்பக் கல்லூரியை தேர்வு செய்யலாம், அதன் படி சிறந்த கல்லூரியில் மாணவர்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்படுமென பொறியியல் மாணவச் சேர்க்கை குழு அறிவித்துள்ளது.

Tags :
#EngineeringGeneralSectionCounselingTamilNaduTNEngineeringAdmissions2024UndergraduateEngineeringCourses
Advertisement
Next Article