For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"திருநங்கைகளுக்கு வழங்கப்பட்டுள்ள பாலின அங்கீகார சான்றுகள் ரத்து" - இங்கிலாந்து உச்சநீதிமன்றம் உத்தரவு!

திருநங்கைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து பாலின அங்கீகார சான்றுகளை ரத்து செய்து இங்கிலாந்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
07:47 AM Apr 17, 2025 IST | Web Editor
திருநங்கைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து பாலின அங்கீகார சான்றுகளை ரத்து செய்து இங்கிலாந்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 திருநங்கைகளுக்கு வழங்கப்பட்டுள்ள பாலின அங்கீகார சான்றுகள் ரத்து    இங்கிலாந்து உச்சநீதிமன்றம் உத்தரவு
Advertisement

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதை தொடர்ந்து 3-ம் பாலினத்தவர்கள், ஓரின சேர்க்கையாளர்கள் உள்ளிட்டோருக்கு தடை விதித்த நிலையில் அவர்கள் நாட்டைவிட்டு வெளியேற்றப்படுவார்கள் என தெரிவித்தார். இதனால் பெரும்பாலான திருநங்கைகள், ஓரின சேர்க்கையாளர்கள் இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு தஞ்சம் புகுந்தனர்.

Advertisement

இதன் காரணமாக இங்கிலாந்தில் தற்போது திருநங்கைகள் மக்கள்தொகை உயர்ந்து வருகின்றது. இங்கிலாந்தில் திருநங்கைகளுக்கு சட்டபூர்வமாக கடந்த 2010-ம் ஆண்டு அந்த நாட்டின் உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

ஆனால் அவர்களை தனி பாலினம் என வரையறுக்காமல் ஆண் அல்லது பெண் என 2 இனங்களில் ஏதவாது ஒரு இனத்தில் தன்னை இணைத்து கொள்ளலாம். அதற்காக பாலின அங்கீகாரச் சான்றிதழை ஆண் அல்லது பெண் இனத்தில் பதிவு செய்து கொண்டு கட்டாயம் வாங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருந்தது.

இதனை தொடர்ந்து அங்கு வசித்து வரும் பெரும்பாலான திருநங்கைகள் தங்களை பெண்கள் என அடையாளப்படுத்தி கொண்டு பாலின அங்கீகாரச் சான்றிதழை பெற்று வந்தனர். இதனால் ராணுவம், மருத்துவம், விளையாட்டு உள்ளிட்டவற்றில் தங்களுக்கு ஒதுக்கப்படும் இடஒதுக்கீட்டில் திருநங்கைகள் ஆக்கிரமிப்பு செய்வதாக பெண்கள் போராட்டம் நடத்தினர்.

திருநங்கைகள் தங்களுக்கு உண்டான இடஒதுக்கீட்டில் உரிமை கோர கூடாது எனக்கூறி இங்கிலாந்தில் உள்ள பெண் உரிமை போராளிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதுதொடர்பாக பெண் நீதிபதி உள்பட 4 பேர் கொண்ட சிறப்பு தனி அமர்வு நீதிபதிகள் விசாரணை நடத்தினர்.

அப்போது பெண்கள் என்னும் வரையறைக்குள் திருநங்கைகளை கூறுவது சட்டவிரோதம் என்றும் திருநங்கைகளை பெண்களாக வரையறுக்க முடியாது எனவும் திருநங்கைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து பாலின் அங்கீகார சான்றுகளை ரத்து செய்து தீர்ப்பு கூறினர். இந்த தீர்ப்புக்கு வரவேற்பு அளித்து பெண் உரிமை குழுவினர் இங்கிலாந்து நாட்டின் வீதிகளில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Tags :
Advertisement