ஸ்மார்ட்போன் ஆர்டர் செய்தவருக்கு பார்சலில் வந்த கல் – அதிர்ச்சி கொடுத்த பிளிப்கார்ட்!
பிளிப்கார்ட் செயலி மூலம் ரூ. 22,000 மதிப்பிலான ஸ்மார்ட்போன் ஆர்டர் செய்தவருக்கு பார்சலில் கல் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலம் காஜியாபாத்தில் பகுதியில் உள்ள ஒருவர் Infinix Zero 30 5G என்னும் ஸ்மார்ட்போனை ஆன்லைனில் தேடியுள்ளார். அப்போது, பிளிப்கார்ட் செயலியில் ரூ. 22,000 மதிப்புள்ள ஸ்மார்ட்போனை ஆர்டர் செய்துள்ளார். இந்நிலையில், அதே நாளில் ஆர்டர் டெலிவரி செய்யப்பட்டது. இதையடுத்து, அந்த நபர் டெலிவரி செய்யப்பட்ட ஆர்டரை பிரித்து பார்த்துள்ளார். இதை பார்த்து அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
இதையும் படியுங்கள் : வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட தடை – தோ்தல் ஆணையம் உத்தரவு!
இந்நிலையில், அவர் ஆர்டர் செய்த அந்த பொட்டியில் ஸ்மார்ட்போனுக்கு பதிலாக கற்கள் இருந்ததுள்ளது. இதனை கண்டு அந்த நபர் அதிர்ச்சியடைந்தார். பின்னர், அந்த நபர் ஆர்டரை திருப்பித் தர முடிவு செய்தார். ஆனால் நிறுவனம் அவரது திரும்பக் கோரியதை நிராகரித்தது.
A #Ghaziabad resident claims he ordered Mobile phone worth Rs22,000 through @Flipkart but instead received stones! Victim claims courier refuses to take back the parcel. So much so for #onlineshopping #onlinefraud @_Kalyan_K #India #mobilephone #infinix @InfinixIndia pic.twitter.com/OkfnMRQ7ma
— AbhishekPatni (@Abhishek_Patni) March 29, 2024
இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக, அந்த வாடிக்கையாளர் தனது சமூகவலைதள பக்கங்களில் எழுதத்தொடங்கினார். அவருக்கு ஆதரவாக பல்வேறு தரப்பினரும் கருத்துகளை பதிவிட்டனர். இந்த நிலையில், பிளிப்கார்ட் நிறுவனம் அந்த வாடிக்கையாளருக்கு தனது மன்னிப்பை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பிளிப்கார்ட் நிறுவனம் தெரிவித்தாவது :
“வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்ததைத் தவிர வேறு பொருளை மாற்றி தருவதை ஒருபோதும் விரும்ப மாட்டோம். மேலும் இந்த சம்பவம் குறித்து மிகவும் வருந்துகிறோம். உங்களுக்கு மேலும் உதவ, தயவுசெய்து உங்கள் ஆர்டர் விவரங்களை private chat மூலம் எங்களுக்கு வழங்கவும், இதனால் அவை இங்கே ரகசியமாக இருக்கும். உங்கள் பதிலை எதிர்பார்த்திருக்கிறோம்"
இவ்வாறு பிளிப்கார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.