For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

காஸா போர் நிறுத்தம் - பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வரவேற்பு!!

08:14 PM Nov 22, 2023 IST | Web Editor
காஸா போர் நிறுத்தம்   பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வரவேற்பு
Advertisement

காஸா மீதான தாக்குதலை 4 நாள்கள் நிறுத்துவதாக இஸ்ரேல் அரசு அறிவித்ததற்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

Advertisement

காஸாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 13,300-ஐ கடந்ததாக அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. பிணைக் கைதிகளை மீண்டும் தாயகம் அழைத்து வர இஸ்ரேல் முடிவெடுத்துள்ளது. முதல் கட்டமாக இன்று இரவு முதல் 4 நாள்களுக்குள் பெண்கள், குழந்தைகள் உள்பட 50 பிணைக் கைதிகளை ஹமாஸ் படையினர் விடுவிக்கவுள்ளதால், அதுவரை காஸா மீதான தாக்குதல் நிறுத்தப்படும் என இஸ்ரேல் அரசு தெரிவித்தது.

இது குறித்து பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் எக்ஸ் தளத்தில் தெரிவித்திருப்பதாவது:

பிணைக் கைதிகளை விடுவிப்பதற்கான ஒப்பந்தம் மற்றும் மனிதாபிமான போர் நிறுத்த அறிவிப்பை நான் வரவேற்கிறேன். பிணைக் கைதிகள் அனைவரையும் விடுவிக்க அயராது உழைத்து வருகிறோம். அறிவிக்கப்பட்டுள்ள மனிதாபிமான போர்நிறுத்தம் மூலம் காஸாவில் உள்ள மக்களை மீட்கவும், உதவிகளை வழங்கவும் அனுமதிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement