#GasCylinder | வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை அதிகரிப்பு!
19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.35 விலை உயர்த்தப்பட்டுள்ளது.
நாட்டில் வணிக பயன்பாடு மற்றும் வீட்டு பயன்பாடு என்று 2 வகையான சிலிண்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் 14.2 கிலோவுடனும், வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் 19 கிலோவுடனும் விறபனை செய்யப்பட்டு வருகின்றன.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கம் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், பெட்ரோல், டீசலை போன்று சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றம் செய்து வருகின்றனர். அந்த வகையில், ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் சமையல் எரிவாயு விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன.
அந்த வகையில் இந்த மாதம் பொது பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விலையை எண்ணெய் நிறுவனங்கள் அதிகரித்துள்ளன. 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை கடந்த மாதம் ரூ.7.50 உயர்ந்து 1817 ஆக விற்பனை செய்யப்பட்ட நிலையில் இந்த மாதம் ரூ.35 ரூபாய் உயர்ந்து ரூ.1855 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஜீன் மாதம் ரூ.1840.50க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும், வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலையில் எவ்வித மாற்றமும் இன்றி ரூ.818.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.