கேஸ் சிலிண்டர்கள் வெடித்து விபத்து - உத்தர பிரதேசத்தில் நிலவும் பதற்றம் !
உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் அருகே லாரி ஒன்று எரிவாயு சிலிண்டர்களை ஏற்றி இந்தநிலையில் இன்று அதிகாலை போபுரா சவுக் அருகே லாரி சென்ற போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் லாரியில் இருந்த கேஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறியது.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கேஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதால் குடியிருப்பு வாசிகள் அச்சமடைந்துள்ளனர். மேலும் விபத்தை பார்த்து பெரும் பீதியடைந்தனர். சுமார் 3 கிமீ தூரத்துக்கு சிலிண்டர்கள் வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். தொடர்ந்து தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தொடர்ந்து விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சிலிண்டர்கள் வெடித்து விபத்திற்குள்ளான சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் உயிரிழப்புகள் நிகழவில்லை என்று கூறப்படுகிறது. அதிகாலையில் சிலிண்டர்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறிய சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமான சூழலும் நிலவியுள்ளது.