Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கஞ்சா கடத்தல் வழக்கு - ஜாமீன் கேட்டு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் மனுத்தாக்கல்!

09:28 PM May 16, 2024 IST | Web Editor
Advertisement

தேனி மாவட்ட காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட கஞ்சா வழக்கில் ஜாமீன் கோரி
சவுக்கு சங்கர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

Advertisement

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் காவல்துறை அதிகாரிகள், பெண் போலீசார் குறித்து
அவதூறாக பேசிய வழக்கில் கடந்த 4-ஆம் தேதி தேனி மாவட்டத்தில் கோவை சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அந்த கைது நடவடிக்கையின் போது கஞ்சா
வைத்திருந்ததாக சவுக்கு சங்கர் மற்றும் அவரது உதவியாளர்கள் ராம்பிரபு, ராஜரத்தினம் மற்றும் கஞ்சா கொடுத்ததாக மகேந்திரன் என்பவர் மீதும் தேனி பழனி செட்டிபட்டி போலீஸார் வழக்கு பதிந்தனர்.

இதனையடுத்து கஞ்சா வழக்குக்காக மே. 7 ஆம் தேதி கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர்,  மறுநாள் (மே.8) மதுரையில் உள்ள போதைப்பொருள் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கில் நீதிபதி செங்கமலச்செல்வன் சவுக்கு சங்கரை மே 22 வரை காவலில் அடைக்க உத்தரவிட்டார். இந்நிலையில் இந்த வழக்கில் தனக்கு ஜாமீன்
வழங்கக்கோரி சவுக்கு சங்கர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்
செய்துள்ளார். காவல் 22 ஆம் தேதி முடிவடைய உள்ள நிலையில், இந்த மனு மே. 20 ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.

Tags :
ArrestBailGanja smuggling casesavukku sankar
Advertisement
Next Article