For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இணையத்தில் கசிந்த கங்குவா படத்தின் VFX காட்சிகள் - அதிர்ச்சியில் படக்குழு!

01:35 PM Jul 17, 2024 IST | Web Editor
இணையத்தில் கசிந்த கங்குவா படத்தின் vfx காட்சிகள்   அதிர்ச்சியில் படக்குழு
Advertisement

கங்குவா படத்தின் VFX காட்சிகள் இணையத்தில் கசிந்துள்ளதால் படக்குழு அதிர்ச்சியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘கங்குவா’. யுவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இத்திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா படானி நடித்து வருகிறார். இப்படத்தில் பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்துள்ளனர்.

திரைப்படத்தின் முதல் மற்றும் இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் மும்பை, கொடைக்கானல் மற்றும் சென்னையில் விறுவிறுப்பாக நடந்து முடிந்தன. ஜமேக்ஸ் மற்றும் 3டி வடிவில் உருவாகி வரும் இத்திரைப்படத்தில், அண்மையில் வெளியான ‘அனிமல்’ திரைப்படத்தில் வில்லனாக நடித்து அனைவரின் கவனத்தை ஈர்த்த பாபி தியோல்,  ‘உதிரன்’ எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப்படத்தின் போஸ்டர்கள், கிளிம்ஸ் வீடியோ, டீசர்  உள்ளிட்டவை மக்களிடம் வரவேற்பை பெற்றது.

இப்படம் வரும் அக்டோபர் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதேபோல இப்படத்தை இரண்டு பாகங்களாக வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சமீபத்தில்  தெரிவித்தார். தற்போது, முதல் பாகத்திற்கான படப்பிடிப்பு மட்டுமே முடிந்திருப்பதாகவும் இரண்டாம் பாகம் 2026-ல் வெளியாகும் தெரிவித்தார்.

கங்குவா திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளதால் படக்குழு இறுதிக்கட்ட பணிகளில் தீவிரமாக வேலை பார்த்து வருகின்றனர். கங்குவா படத்தில் விஎஃப்எக்ஸ் காட்சிகள் அதிகம் என்பதால், பல நிறுவனங்கள் இதன் பணிகளைச் செய்து வருகின்றன.
இந்த நிலையில், கடலில் செல்வதுபோலவும் முதலையின் கண் தெரிவது போலவும் கங்குவா படத்தில் இடம்பெற்ற விஎஃப்எக்ஸ் காட்சிகள் இணையத்தில் கசிந்துள்ளன. இதனால், படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளது.

Tags :
Advertisement