Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#Kanguva திரைப்படம் ரூ.2,000 கோடி வசூலிக்கும் - தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா நம்பிக்கை!

01:47 PM Oct 16, 2024 IST | Web Editor
Advertisement

கங்குவா திரைப்படம் உலகளவில் ரூ.2000 கோடி வசூலிக்கும் என தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல் ராஜா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Advertisement

நடிகர் சூர்யா தனது அடுத்த படமான கங்குவா மூலம் பான் இந்தியா ஸ்டார் ஆகிறார். இதுவரை தயாரிக்கப்பட்ட இந்திய படங்களிலேயே மிகவும் அதிகம் செலவழித்து உருவாக்கப்பட்ட பிரமாண்டமான படங்களில் ஒன்றாக கங்குவா அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இப்படத்தில் பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன் அதிக எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளது. உண்மையில், கங்குவா திரைப்படத்தின் தயாரிப்பாளர், கே.இ.ஞானவேல்ராஜா, இந்தப் படம் ரூ.2000 கோடி வசூலிக்கும் என்று கணித்துள்ளார். இதற்கு முன்பு ஒரே ஒரு இந்திய படம் மட்டும் தான் இந்த சாதனையை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் சமூக ஊடகத்துக்கு கங்குவா படக்குழுவினர் அளித்த பேட்டியில், ஸ்டுடியோ கிரீன் பேனரின் கீழ் கங்குவாவை தயாரித்த கே.ஈ.ஞானவேல் ராஜாவிடம் 1000 கோடி பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷனை கங்குவா அடிக்குமா என்பது குறித்து கேட்கப்பட்டது.

ஏனெனில், கே.ஜி.எஃப் 2 மற்றும் இந்தி, தெலுங்கு மொழிப் படங்கள் மட்டுமே இந்தச் சாதனையைச் செய்துள்ளன. இதுவரை எந்த தமிழ்ப் படமும் அந்த சாதனையை எட்டியதில்லை.

கங்குவாவால் அதை மாற்ற முடியுமா என்று படத்தின் தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல் ராஜாவிடம் கேட்ட போது, "நான் ரூ.2000 கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூலை எதிர்பார்க்கிறேன். அதை ஏன் ரூ.1000 கோடி என்று குறைத்து மதிப்பிடுகிறீர்கள்" என்று நம்பிக்கையுடன் பதிலளித்தார்.

பல தயாரிப்பு நிறுவனங்கள் பாக்ஸ் ஆபிஸ் எண்களை உயர்த்துகின்றன என்ற சமீபத்திய குற்றச்சாட்டுகளுக்கும் கங்குவா தயாரிப்பாளர் கே.இ. ஞானவேல் ராஜா பதிலளித்துள்ளார்.

குறிப்பாக, கங்குவா படத்தின் வசூல் வெளிப்படையாக இருக்கும் என்று தெரியப்படுத்தினார்.

இதுதொடர்பாகப் பேசிய தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல் ராஜா, "ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்திடமிருந்து ஜிஎஸ்டியை சமர்ப்பித்து கங்குவா பாக்ஸ் ஆபிஸ் வசூல் தொடர்பான தகுந்த ஆவணங்களை வழங்க உத்தேசித்துள்ளேன். எதிர்காலத்தில், ஆர்வமுள்ள அனைத்து தரப்பினரும் இந்த தகவலை மற்ற தயாரிப்பாளர்களுடன் சரிபார்த்து, உண்மையான பாக்ஸ் ஆபிஸ் வசூல் அறிக்கைகளை உறுதிசெய்துகொள்ளலாம்"என்று அவர் மேலும் கூறினார்.

ரூ.350 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் இதுவரை தயாரிக்கப்பட்ட தமிழ்ப் படங்களில் ஒன்று, கங்குவா. ஏழு நாடுகளில் படமாக்கப்பட்ட இப்படம் உலகம் முழுவதும் 35 மொழிகளில் வெளியாகவுள்ளது. கங்குவா திரைப்படத்தில் இந்திய சினிமாவின் மிகப்பெரிய போர்க் காட்சி படமாக்கப்பட்டிருக்கிறது. இதில் 10,000-க்கும் மேற்பட்டோர் போர் புரிவதுபோல் நடித்துள்ளனர். இப்படத்தில் நடிகர் சூர்யாவுடன், பாலிவுட் நடிகர் பாபி தியோல், பாலிவுட் நடிகை திஷா பதானி, கிச்சா சுதீப், ஜெகபதி பாபு, நடராஜன் சுப்ரமணியம் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கங்குவா படம் வரக்கூடிய நவம்பர் 14-ம் தேதி வெளியாகிறது.

கங்குவா திரைப்படத்தின் படப்பிடிப்பு கோவா, எண்ணூர் துறைமுகம், பிஜி தீவுகள், கொடைக்கானல், ஆந்திர மாநிலத்தின் ராஜமுந்திரி பகுதிகளில் நடைபெற்றது.

முன்னதாக படம் குறித்து பேசிய இயக்குநர் சிறுத்தை சிவா, “உண்மையில் கங்குவன் என்பது ஒரு மொழி. படத்தின் போஸ்டரில் கங்குவன் என்ற பெயருக்கு மேலே இடம் பெற்றுள்ள எழுத்தானது வட்டெழுத்து என்று அழைக்கப்படும் பழங்காலத் தமிழ் ஆகும். இது 3ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு வழக்கத்தில் இருந்தது. கங்கு என்றால் நெருப்பு என்று பொருள். கங்குவான் என்றால் நெருப்பு சக்தி கொண்ட மனிதன் என்று பொருள்படும்” என்று பேசியிருக்கிறார், சிறுத்தை சிவா.

Tags :
Gnanavel RajaKanguvasiruthai sivaSuriya
Advertisement
Next Article