#GaneshChaturthi எதிரொலி - தோவாளை சந்தையில் பூக்களின் விலை அதிகரிப்பு!
விநாயகர் சதுர்த்தியையொட்டி, பிரசித்திப் பெற்ற தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை மற்றும் விற்பனை அதிகரித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பகுதியில் மலர் வணிக வளாகம் அமைந்துள்ளது. இங்கு
பெங்களூரு, ஓசூர், திண்டுக்கல், ராயக்கோட்டை மற்றும் உள்ளூர்களான செண்பகராமன்புதூர், ஆரல்வாய்மொழி, தோவாளை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வண்ணவண்ண பூக்கள் விற்பனைக்கு வருவதுண்டு. இங்கு உள்ளூர் வியாபாரிகள் மட்டுமல்லாமல், அண்டை மாநிலமான கேரளா மற்றும் நெல்லை, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பூ வியாபாரிகள் மொத்தமாக பூக்களை வாங்கி விற்பனைக்கு கொண்டு செல்வதுண்டு.
இங்கு தினசரி சந்தையானது களைகட்டும். இந்நிலையில் இன்று சுபமுகூர்த்த தினம் மற்றும் நாளை விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு மேலும் சந்தை களைகட்டியுள்ளது. இந்நிலையில் பண்டிகைகளுக்கு தேவையான மலர்களை வாங்க உள்ளூர் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் தோவாளை மலர் சந்தைக்கு குவிந்து வருகின்றனர். இதனால் பூக்களின் விற்பனை அதிகரித்துள்ளது. பிச்சிப்பூ ரூபாய் ஆயிரத்திற்கும், மல்லிகை ஒரு கிலோ ரூபாய் 500க்கும்
விற்பனையாகிறது. மேலும் மலையாள மொழி பேசும் மக்களின் வசந்த கால பண்டிகையான ஓணம் இன்று துவங்கியதை அடுத்து, பூக்களின் விலை மேலும் அதிகரிக்கும் என பூ
வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்,