For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#GandhiTalks | விஜய் சேதுபதி நடித்துள்ள இந்தி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது!

09:20 PM Oct 02, 2024 IST | Web Editor
 gandhitalks   விஜய் சேதுபதி நடித்துள்ள இந்தி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது
Advertisement

இந்தியில் விஜய் சேதுபதி நடித்துள்ள காந்தி டாக்ஸ் திரைப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டு காந்தி ஜெயந்தி வாழ்த்து தெரிவித்துள்ளது.

Advertisement

தனது தனித்துவமான நடிப்பு மற்றும் கதாபாத்திர தேர்வால் தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. தமிழ் மொழியை தாண்டி மலையாளம், தெலுங்கு, இந்தி என பிற மொழிகளிலும் விஜய் சேதுபதியின் நடிப்பிற்கு தனி ரசிகர் பட்டாளம் உண்டு.

குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. இத்திரைப்படம் கடந்த ஜூன் 14-ம் தேதி வெளியானது. வெளியான முதல் நாளிலிருந்தே மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வந்தது. விஜய் சேதுபதியின் 50-வது திரைப்படமான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதோடு, கதாநாயகனாக விஜய் சேதுபதிக்கும் ஒரு நல்ல கம்பேக் திரைப்படமாக அமைந்தது.

படத்தின் வசூல் ரூ.100 கோடியை தாண்டியது.  திரையரங்கைத் தொடர்ந்து ஓடிடியில் வெளியான மகாராஜா ஆச்சரியப்படும் விதமாக இந்தி ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது. ஓடிடியில் வெளியான நாள் முதல் மகாராஜா படத்தின் காட்சிகளை இந்தி மீம் கிரியேட்டர்ஸ் புகழ்ந்து தள்ளினர்.

இந்தி ரசிகர்களிடையே இப்படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பு காரணமாக இப்படத்தை  இந்தி ரீமேக் செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வந்த நிலையில் மகாராஜா படத்தின் இந்தி ரீமேக் உரிமத்தை பாலிவுட் நடிகர் ஆமிர் கான் வாங்கியுள்ளதாகவும் விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்தில் அவரே நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்தநிலையில் மிஷ்கின் இயக்கத்தில் ட்ரெய்ன், வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2 உள்ளிட்ட படங்களை நடித்து முடித்த நிலையில் இந்தியில் 'காந்தி டாக்ஸ்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை கிஷோர் பாண்டுரங் பெலேகர் இயக்கியுள்ளார். மேலும் விஜய் சேதுபதியுடன் அரவிந்த்சாமி, அதிதி ராவ் ஹைதரி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். கடந்த 2022ம் ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட நிலையில் தற்போது படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

கமல்ஹாசனின் பேசும் படம் போன்று இந்த படத்தை மவுன படமாக எடுத்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்தநிலையில் இன்று மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு 'காந்தி டாக்ஸ்' படத்தின் இரண்டு நிமிட மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளார் விஜய் சேதுபதி. அதோடு. இன்று முக்கியமான குரல், மூலை முடுக்கெல்லாம் விரைவில் எதிரொலிக்கும் குரல்! அனைவருக்கும் காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள் படம் விரைவில் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement