கேலோ இந்தியா போட்டிகள் நிறைவு.. பதக்கப்பட்டியலில் 2-ஆம் இடம் பிடித்து தமிழ்நாடு அசத்தல்!
கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் இன்றுடன் நிறைவடைந்த நிலையில் 38 தங்கம், 20 வெள்ளி, 39 வெண்கலம் என 97 பதக்கங்களை பெற்று தமிழ்நாடு இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.
மத்திய அரசு திட்டத்தின் கீழ் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் கடந்த 2018ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் நடத்தப்பட்ட இந்த போட்டியானது, இந்தாண்டு தமிழ்நாட்டிலும் நடத்தப்பட்டது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய 4 மாவட்டங்களில் இந்த விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.
நேரு உள்விளையாட்டு அரங்கில், கடந்த 19 ஆம் தேதி இந்த விளையாட்டு போட்டிகள் தொடங்கின. இந்நிலையில் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் நடைபெற்ற இந்த கேலோ இந்தியா போட்டிகள் இன்றுடன் நிறைவறைவடைந்தன. இந்தபோட்டிகளில் மகாராஷ்டிரா 55 தங்கம், 48 வெள்ளி, 53 வெண்கல பதக்கங்கள் பெற்று முதலிடத்தை பிடித்தது.
தமிழ்நாடு 38 தங்கம், 20 வெள்ளி, 39 வெண்கலம் என மொத்தம் 97 பதக்கங்களை பெற்று பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. ஹரியானா 35 தங்கம், 22 வெள்ளி, 46 வெண்கலம் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.