ஓடிடியில் வெளியானது ஜி.வி பிரகாஷின் ’பிளாக்மெயில்’
ஜி.வி.பிரகாஷ்குமார், ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளிவந்த ’பிளாக்மெயில்’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
04:25 PM Oct 30, 2025 IST
|
Web Editor
Advertisement
நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ்குமார் நடிப்பில் வெளியான திரைப்படம் பிளாக் மெயில். இப்படத்தை 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' & 'கண்ணை நம்பாதே' உள்ளிட்ட படங்களை இயக்கியவர் மு. மாறன் இயக்கியிருந்தார்.
Advertisement
தேஜு அஸ்வினி, ஸ்ரீ காந்த், பிந்துமாதவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஜேடிஎஸ் பிலிம் பேக்டரி தயாரித்த இப்படத்திற்கு கோகுல் பினாய் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். மேலும் சாம்.சிஎஸ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
கடந்த செப்டம்பர் 12ந் தேதி தியேட்டரில் வெளியாகிய பிளாக் மெயில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதனை தொடர்ந்து இப்படம் அக்டோபர் 30 ஆம் தேதி ஓடிடியில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன் படி பிளாக்மெயில் திரைப்படம் தற்போது சன் நெக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளது.
Next Article