Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஜி.வி. பிரகாஷ் குமாரின் ஹாப்பி ராஜ் பட ஃப்ர்ஸ்ட்லுக் வெளியீடு...!

இசையமைப்பாளர்-நடிகர் ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகி வரும் 'ஹாப்பி ராஜ்' திரைப்படத்தின் ஃப்ர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
06:51 PM Dec 07, 2025 IST | Web Editor
இசையமைப்பாளர்-நடிகர் ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகி வரும் 'ஹாப்பி ராஜ்' திரைப்படத்தின் ஃப்ர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
Advertisement

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் ஜி.வி.பிரகாஷ் 2 குமார். இவர் இசை மட்டுமின்றி நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான டார்லிங், திரிஷா இல்லனா நயன்தாரா ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் தற்போது ஜி.வி. பிரகாஷ் 'ஹாப்பி ராஜ்' என்னும் புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அறிமுக இயக்குனரான மரியா ராஜா இளஞ்செழியன் இயக்குகிறார். இவர் பிரதீப் ரங்கநாதனின் 'லவ் டுடே' படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.

Advertisement

நடிகர் அப்பாஸ் இந்த படத்தின் மூலம் 11 வருடங்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவிற்கு கம்பேக் கொடுக்கிறார். மேலும் இந்தப் படத்தில் ஜிவி பிரகாஷ்-க்கு ஜோடியாக ஸ்ரீ கௌரி பிரியா நடிக்கிறார். இப்படத்தை பியாண்ட் பிக்சர்ஸ் (Beyond Pictures) நிறுவனம் தயாரிக்கிறது. ரொமாண்டிக் காமெடி படமாக உருவாகும் இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.

நேற்று இப்படத்தின் டைடல் போஸ்டர் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் தற்போது இப்படத்தின் ஃப்ர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

Tags :
#FirstLookcinemanewsCinemaUpdategvprakshkumarhappyrajlatestNews
Advertisement
Next Article