திருப்பதி மலையில் பௌர்ணமி கருட சேவை - ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்!
திருப்பதி மலையில் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு கருட சேவை வெகு விமரிசையாக நடைபெற்றது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மாதந்தோறும் பௌர்ணமி தினத்தன்று இரவு 7 மணி முதல் 9 மணி வரை தங்க வாகன திருவீதி உலா நடைபெறுவது வழக்கம். இதில் உற்சவரான மலையப்பசாமி எழுந்தருளி கோயிலின் நான்கு மடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதையும் படியுங்கள் : “பயப்படுபவர்கள் கட்சியை விட்டு வெளியேறுங்கள்; உங்களுக்கு RSS தான் சரியான இடம்!” – ராகுல் காந்தியின் வீடியோவை பகிர்ந்த காங்கிரஸ்!
அந்த வகையில், பௌர்ணமி தினமான நேற்று (பிப்.24) திருப்பதி மலையில் ஏழுமலையானின் கருட வாகன புறப்பாடு நடைபெற்றது. கருட வாகன புறப்பாட்டை முன்னிட்டு உற்சவர் மலையப்பசாமி கோயிலில் இருந்து புறப்பட்டு வாகன மண்டபத்தை அடைந்தார். அதன்பின் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளிய உற்சவருக்கு தீப, தூப, நைவேத்திய சமர்ப்பணம் நடத்தப்பட்டது.தொடர்ந்து இரவு 7 மணி முதல் 9 மணி வரை திருப்பதி மலையில் உள்ள கோயிலின் மாட வீதிகளில் ஏழுமலையானின் கருட வாகன புறப்பாடு கோலாகலமாக நடைபெற்றது.
இந்த திருவீதி உலாவை காண்பதற்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மாட வீதிகளில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.