இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்: ஆப்கன் அணியில் இருந்து ரஷீத் கான் விலகல்!
இந்தியாவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர வீரரான ரஷீத் கான் விலகியுள்ளார்.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில்விளையாட உள்ளது. இதில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஆட்டம் நாளை பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நடைபெற உள்ளது. இப்போட்டிக்கான இந்திய அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் தலைவராக ரோகித் சர்மா விளையாட உள்ளார்.
ரஷீத் கான் இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பைக்குப் பிறகு விளையாடவில்லை. அவர் முதுகில் ஏற்பட்ட காயத்திற்கு இங்கிலாந்தில் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். தற்போது அதிலிருந்து அவர் மீண்டு வருகிறார். இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்க சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணியில் நட்சத்திர வீரர் ரஷித் கான் இடம் பெற்றுள்ளார். இதனால் இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் அவர் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆனால் இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் ரஷீத் கான் இல்லை என்பதை இப்ராஹிம் ஜார்டன் உறுதிபடுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது,
அவர் இந்த தொடரில் விளையாடுவதற்காக முழு உடல் தகுதி எட்டப்படாத நிலையில், தொடரில் பங்கேற்று விளையாடுவது சந்தேகம் என அந்த ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் இப்ராஹிம் ஜார்டன் தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் முழு உடல் தகுதி எட்டிவிட்டால், அணியில் விளையாட உட்படுத்தப்படுவார் எனவும் இப்ராஹிம் ஜார்டன் தெரிவித்துள்ளார்.