கஞ்சா விற்பனை முதல் அரசியல் கட்சியின் மாவட்ட தலைவி வரை... ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் அஞ்சலை யார்?
கஞ்சா விற்பனை முதல் அரசியல் கட்சி மாவட்ட தலைவி வரை செயல்பட்டு வந்த அஞ்சலை யார் அவருக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் என்ன தொடர்பு என்பது குறித்து விரிவாக காணலாம்.
பகுஜன் சமாஜ் கட்சி தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங்க், சென்னை பெரம்பூரில், ஜூலை 5ம் தேதி ரவுடி கும்பலால் கொடூரமாக கொல்லப்பட்டார். இந்த வழக்கில், 11 பேரை செம்பியம் போலீசார் கைது செய்தனர். அவர்களில், சென்னை குன்றத்துாரைச் சேர்ந்த ரவுடி, திருவேங்கடம் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டார். இவர் தவிர மற்ற 10 பேரும் காவல் விசாரணை முடிந்து பூந்தமல்லி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த கொலையில் பாஜக நிர்வாகிகள் செல்வராஜ் மற்றும் அஞ்சலை ஆகியோர் முக்கிய பங்காற்றியுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. இதில் வட சென்னை பாஜக மகளிரணி துணை செயலாளரான அஞ்சலை தலைமறைவாகியுள்ள நிலையில், அவரை தனிப்படை போலீசார் தேடி வருகிறார்கள். மேலும் பாஜக நிர்வாகி செல்வராஜையும் கைது செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
யார் இந்த அஞ்சலை?
- ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான பொன்னை பாலுவின் சகோதரர் மறைந்த பிரபல ரவுடியான ஆற்காடு சுரேஷின் மனைவியும் பாஜக நிர்வாகியுமான புளியந்தோப்பு அஞ்சலை தான் முக்கிய குற்றவாளி என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
- ஆம்ஸ்ட்ராங் ஜூலை 5ம் தேதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். சென்னையில்
கொல்லப்பட்ட ரவுடி ஆற்காடு சுரேஷ் படுகொலைக்கு பழிவாங்கவே ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக சொல்லப்படுகிறது. - வடசென்னையில் கஞ்சா விற்பனையில் முக்கிய நபராக வலம் வந்தவர் அஞ்சலை.
- கொல்லப்பட்ட ரவுடி ஆற்காடு சுரேஷின் காதலியாக இருந்த அஞ்சலையை பின்னர் திருமணமும் செய்து கொண்டார். சென்னையில் 2019-ம் ஆண்டு அஞ்சலையை 'ரகசியமாக' சந்திக்க வந்த போது ஆற்காடு சுரேஷ் போலீசில் சிக்கி பின்னர் ஜாமீனில் வெளிவந்தார்.
- இதன் பின்னர் பாஜகவில் இணைந்த அஞ்சலை தமிழ்நாடு பாஜகவின் வடசென்னை
மாவட்ட மகளிர் அணி தலைவியாக பதவி வகித்து வந்தார். - ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில், போலீசாரால் தேடப்பட்டு வரும் நிலையில் அஞ்சலையை கட்சியில் இருந்து நீக்கி பாஜக மாநில தலைமை நேற்றிரவு நடவடிக்கை எடுத்துள்ளது.