“இனிமேல் இங்க நான் தான்...” - வெளியானது ‘தக் லைஃப்’ டிரெய்லர்!
மணிரத்னம் – கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தக் லைஃப்’. ராஜ்கமல், மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரிக்கும் இப்படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வழங்குகிறது. இப்படத்தில் கமலுடன் இணைந்து சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்திலிருந்துந்து ஜிங்குச்சா என்ற பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் வருகிற ஜூன் 5ஆம் தேதி வெளியாகவுள்ளதால் கடந்த 16 ஆம் தேதி படத்தின் வெளியீட்டு விழா நடத்த படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால், இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றத்தின் காரணாமாக இசை வெளியீட்டு விழா நடைபெறும் தேதியை மாற்றியமைக்க முடிவெடுத்திருப்பதாக படக்குழு அறிவித்தது.
இந்த நிலையில் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. அதில் ஆரம்பத்தில் கமல்ஹாசன் மற்றும் சிம்பு ஆகியோர் நண்பர்கள் போலவும், இறுதியில் சண்டையிடும் எதிரிகளைப் போலவும் காட்சிபடுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே கமல்ஹாசனின் காதல் காட்சிகளும், சிம்புவின் அதிரடியான துப்பாக்கி சண்டை காட்சிகளும் இடம்பெற்றுள்ளது. அதன் தொடர்ச்சியாக “இனிமேல் இங்க நான் தான்..” என்ற மாஸான பஞ்ச டயலாக்குகளை சிம்பு பேசுவதுபோல் காட்சிபடுத்தப்பட்டுள்ளது.