Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கே.வி.மகாதேவன் முதல் ஏ.ஆர்.ரஹ்மான் வரை... #NationalFilmAwards வென்ற தமிழ் இசையமைப்பாளர்கள் பட்டியல் இதோ!

06:22 PM Aug 16, 2024 IST | Web Editor
Advertisement

இசையமைப்பாளர்கள் கே.வி.மகாதேவன் முதல் ஏ.ஆர்.ரஹ்மான் வரை இதுவரை தேசிய விருது வென்ற தமிழ் இசையமைப்பாளர்கள் குறித்து காணலாம்.

Advertisement

இந்திய திரைத்துறையை ஊக்குவிக்கும் விதமாகவும், கௌரவிக்கும் வகையிலும் 1954-ம் ஆண்டில் இருந்து தேசிய திரைப்பட விருதுகள் இந்திய திரைப்படங்களுக்கும், திரைப்பட கலைஞர்களுக்கும் மத்திய அரசால் தேசிய விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் கொரோனா காரணமாக 2019-ம் ஆண்டிலிருந்து 2 ஆண்டுகள் முடிந்து இந்த விருது அறிவிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் 2022-ம் ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. 2022-ம் ஆண்டு வெளியான குறும்படங்கள், ஆவணப்படங்கள், முழு நீள படங்களுக்கு இந்த நிகழ்வில் விருதுகள் அறிவிக்கப்பட்டன. மொத்தம் 27 பிரிவுகளின் கீழ் இந்த படங்கள் தேர்வு செய்யப்பட்டன. 32 மொழிகளைச் சேர்ந்த 309 படங்கள் இந்த ஆண்டு பங்கேற்றன.

இதில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன் முதல் பாகம்’ படத்திற்கு சிறந்த தமிழ் மொழி திரைப்படத்திற்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது. அதோடு சிறந்த பின்னணி இசையமைப்பு, சிறந்த ஒலி வடிவமைப்பு, சிறந்த ஒளிப்பதிவாளர் ஆகிய பிடிவுகளிலும் தேசிய விருதை வசப்படுத்தி பொன்னியின் செல்வன் பாகம் -1 திரைப்படக்குழு அசத்தியுள்ளது. சிறந்த பின்னணி இசைக்காக ஏ.ஆர்.ரஹ்மான், சிறந்த ஒலி வடிவமைப்புக்கு ஆனந்த் கிருஷ்ண்மூர்த்தி, சிறந்த ஒளிப்பதிவாளராக ரவி வர்மன் தேசிய விருதை பெறுகின்றனர்.

இந்நிலையில், இதுவரை தேசிய விருது வென்ற தமிழ் இசையமைப்பாளர்கள் குறித்து காணலாம்.

கே.வி.மகாதேவன்: 

  1. 15வது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் 1967-ம் ஆண்டு வெளியான கந்தன் கருணை (தமிழ்) திரைப்படத்திற்காகவும்,
  2. 27வது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் 1979-ம் ஆண்டு வெளியான சங்கராபரணம் (தெலுங்கு) திரைப்படத்திற்காகவும் இசையமைப்பாளர் கே.வி.மகாதேவனுக்கு வழங்கப்பட்டது.

இளையராஜா:

  1. 31வது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் 1983-ம் ஆண்டு வெளியான சாகர சங்கமம் (தெலுங்கு) என்ற படத்திற்காகவும்,
  2. 33வது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் 1985-ம் ஆண்டு வெளியான சிந்து பைரவி (தமிழ்) என்ற படத்திற்காகவும்,
  3. 36வது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் 1988-ம் ஆண்டு வெளியான ருத்ரவீணை (தெலுங்கு) என்ற படத்திற்காகவும்,
  4. 57வது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் 2009-ம் ஆண்டு வெளியான பழசிராஜா (மலையாளம்) என்ற படத்திற்காகவும்,
  5. 63வது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் 2015-ம் ஆண்டு வெளியான தாரை தப்பட்டை (தமிழ்) என்ற படத்திற்காகவும் என இசையமைப்பாளர் இளையராஜா 5 முறை தேசிய விருதுகள் பெற்றார்.

பாலமுரளி கிருஷ்ணா:

32வது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் 1986-ம் ஆண்டு வெளியான மத்வத்சாரியா (கன்னடம்) என்ற படத்திற்காக மங்கலம்பள்ளி பாலமுரளி கிருஷ்ணா (எ) எம்.பாலமுரளி கிருஷ்ணா தேசிய விருது பெற்றார். இவர் கடந்த 2016-ம் ஆண்டு உயிரிழந்தார்.

ஏ.ஆர்.ரஹ்மான்:

  1. 40வது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் 1992-ம் ஆண்டு வெளியான ரோஜா (தமிழ்) என்ற திரைப்படத்திற்காகவும்,
  2. 44வது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் 1996-ம் ஆண்டு வெளியான மின்சார கனவு (தமிழ்) என்ற படத்திற்காகவும்,
  3. 49வது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் 2001-ம் ஆண்டு வெளியான லகான் (ஹிந்தி)
    என்ற படத்திற்காகவும்,
  4. 50வது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் 2002-ம் ஆண்டு வெளியான கன்னத்தில் முத்தமிட்டால் (தமிழ்) என்ற படத்திற்காகவும்,
  5. 65வது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் 2017-ம் ஆண்டு வெளியான காற்று வெளியிடை (தமிழ்) என்ற படத்திற்காகவும்,
  6. அதே ஆண்டு வெளியான மாம் (ஹிந்தி) என்ற படத்திற்காகவும்,
  7. 70வது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் 2022-ம் ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் (தமிழ்) என்ற படத்தின் முதல் பாகத்திற்காகவும் என 7 முறை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தேசிய விருதுகளை பெற்றார். இதில் 5 முறை ஏ.ஆர்.ரஹ்மான் தமிழ் திரைப்படத்தில் பணியாற்றியதற்காக விருதுகள் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

வித்யாசாகர்:

52வது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் 2004-ம் ஆண்டு வெளியான ஸ்வரபிஷேகம் (தெலுங்கு) என்ற படத்திற்காக இசையமைப்பாளர் வித்யாசாகர் ஒரு முறை தேசிய விருது பெற்றுள்ளார்.

லால்குடி ஜெயராமன்:

53வது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் 2005-ம் ஆண்டு வெளியான சிருங்காரம் (தமிழ்) என்ற படத்திற்காக இசையமைப்பாளர் லால்குடி ஜெயராமன் ஒரு முறை தேசிய விருது பெற்றுள்ளார்.

இமான்:

67வது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் 2019-ம் ஆண்டு வெளியான விஸ்வாசம் (தமிழ்) என்ற படத்திற்காக இசையமைப்பாளர் டி.இமான் ஒரு முறை தேசிய விருது பெற்றார்.

தமன்:

68வது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் 2020-ம் ஆண்டு வெளியான அல வைகுண்டபுரமேலு (தெலுங்கு) என்ற படத்திற்காக இசையமைப்பாளர் தமன் ஒரு முறை தேசிய விருது பெற்றார்.

ஜி.வி.பிரகாஷ் குமார்:

68வது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் 2020-ம் ஆண்டு வெளியான சூரரைப் போற்று (தமிழ்) என்ற படத்திற்காக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் ஒரு முறை தேசிய விருது பெற்றார்.

தேவிஸ்ரீபிரசாத்:

68வது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் 2021-ம் ஆண்டு வெளியான புஷ்பா (தெலுங்கு) என்ற படத்திற்காக இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் ஒரு முறை தேசிய விருது பெற்றார்.

Tags :
ar rahmanarrDSPGVPIlayarajaImmanKV MahadevanNational film awardsNews7Tamilnews7TamilUpdatesVidyasagar
Advertisement
Next Article