For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஜான்சினா முதல் விராட் கோலி வரை, ஒவைசி முதல் ரொனால்டோ வரை கும்பமேளாவில் பங்கேற்றனரா? - வைரல் படங்கள் உண்மையா?

2025 பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் பங்கேற்றதாக மல்யுத்தம், அரசியல், சினிமா மற்றும் விளையாட்டு பிரபலங்களில் படத்தொகுப்பு வைரலானது.
04:36 PM Jan 30, 2025 IST | Web Editor
ஜான்சினா முதல் விராட் கோலி வரை  ஒவைசி முதல் ரொனால்டோ வரை கும்பமேளாவில் பங்கேற்றனரா    வைரல் படங்கள் உண்மையா
Advertisement

This News Fact Checked by ‘FACTLY’

Advertisement

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ்ஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் பங்கேற்றதாகக் கூறப்படும் நடிகர்கள், அரசியல்வாதிகள், மல்யுத்த வீரர்கள் மற்றும் விளையாட்டுப் வீரர்களை கொண்ட பல படங்கள் ( இங்கே , இங்கே , இங்கே , இங்கே, இங்கே  , இங்கே  மற்றும் இங்கே ) சமூக ஊடகங்களில் பரவலாகப் பரவி வருகின்றன. இந்த படங்களின் உண்மைத் தன்மையை விரிவாக ஆராய்வோம்

   கும்பமேளாவில் மல்யுத்த வீரர்கள் பங்கேற்றனரா?

பிரபல மல்யுத்த வீரரான் ஜான்சினா, ப்ரோக் லெஸ்னர் மற்றும் டுவைன் ஜான்சன் (ராக்) போன்ற மல்யுத்த வீரர்களின் படங்கள் ( இங்கே , இங்கே & இங்கே ) கும்பமேளாவில் பங்கேற்றதாக பரவலாக பரப்பப்படுகின்றன. இந்திய மல்யுத்த வீரர்களான கிரேட் காலியை தவிர்த்து பிற வெளிநாட்டு மல்யுத்த வீரர்கள் கும்பமேளாவில் பங்கேற்றதற்கான உறுதிப்படுத்தும் நம்பகமான அறிக்கைகள் இன்றுவரை கிடைக்கவில்லை.

வைரலாகும் படங்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலுக்கு உட்படுத்தியபோது  எங்களை " Wrestling Community " என்ற பெயரில் ஒரு பேஸ்புக் பக்கத்திற்கு அழைத்துச் சென்றது , அங்கு இந்த படங்கள் முன்பு பதிவேற்றப்பட்டன. மல்யுத்த வீரர்களின் புகைப்படங்கள் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டவை என்று அந்தப் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அப்படங்களில் விரல்கள் எண்ணிக்கை குறைவுடனும், சிதைந்த முகங்கள் மற்றும் மங்கலான பின்னணி போன்ற முரண்பாடுகளை படங்களில் காணலாம். ஹைவ் மற்றும் சைட் எஞ்சின் போன்ற AI கண்டறிதல் கருவிகளைப் பயன்படுத்தி இந்தப் படங்களையும் நாங்கள் பகுப்பாய்வு செய்தோம் , அவை AI-ஆல் உருவாக்கப்பட்டவை என அடையாளம் கண்டுள்ளது.

கும்பமேளாவில் அரசியல்வாதிகள் பங்கேற்றனரா?

நரேந்திர மோடி, அசாதுதீன் ஒவைசி, டொனால்ட் டிரம்ப், விளாடிமிர் புடின், எலோன் மஸ்க் மற்றும் பிரகாஷ் ராஜ் போன்ற அரசியல் பிரமுகர்களைக் கொண்ட மற்றொரு படத்தொகுப்பு ( இங்கே , இங்கே & இங்கே ) கும்பமேளாவில் அவர்கள் பங்கேற்றதாக பகிரப்படுகிறது. மத்திய அமைச்சர் அமித்ஷாவை தவிர்த்து பிற தலைவர்கள் கும்பமேளா நிகழ்வில் பங்கேற்பதை உறுதிப்படுத்தும் நம்பகமான அறிக்கைகள் எதுவும் கிடைக்கவில்லை. இதை எழுதும் நேரத்தில், பிரதமர் மோடி 05 பிப்ரவரி 2025 அன்று கும்பமேளாவிற்கு வருகை தருவார் என்று ஊடக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. மேலும் பிரகாஷ்ராஜின் குழு அவர் பங்கேற்கவில்லை என மறுத்துள்ளது .

வைரலாகும் படங்களை கூர்ந்து கவனித்தபோது, ​​படங்களில் உள்ள முரண்பாடுகளை நாங்கள் கவனித்தோம், அவை AI-உருவாக்கப்பட்டதா என்ற சந்தேகத்தை எழுப்பியது.  AI-கண்டறிதல் கருவிகளைப் பயன்படுத்தி மேலும் பகுப்பாய்வு செய்ததில் இந்த படங்கள் உண்மையில் செயற்கை நுண்ணறிவால்  உருவாக்கப்பட்டவை என்பதை உறுதிப்படுத்தியது.

கும்பமேளாவில் நடிகர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனரா?

பிரயாக்ராஜ் கும்பமேளாவில் பங்கேற்றதாகக் கூறி, ஆலியா பட், அனுஷ்கா ஷர்மா, கத்ரீனா கைஃப் மற்றும் விளையாட்டு வீரர்களான விராட் கோலி, லியோனல் மெஸ்ஸி மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ போன்றவர்கள் இடம்பெற்றுள்ள மற்றொரு படத்தொகுப்பு ( இங்கே , இங்கே & இங்கே ) பகிரப்பட்டது. தற்போதைய நிலவரப்படி, இந்த நிகழ்வில் அவர்கள் பங்கேற்பதை உறுதிப்படுத்தும் நம்பகமான அறிக்கைகள் எதுவும் கிடைக்கவில்லை. கூடுதலாக, அவர்களின் சமூக ஊடக பக்கங்களிலும் அத்தகைய படங்கள் வெளியாகவில்லை.

இந்த படங்கள் பல முரண்பாடுகளை வெளிப்படுத்துகின்றன, மேலும் AI-கண்டறிதல் கருவிகள் மூலம் இவற்றை ஆய்வுக்கு உட்படுத்தியபோது இவை AI-ஆல் உருவாக்கப்பட்டவை என்பதை உறுதிப்படுத்தியுள்ளன. முன்னதாக, கும்பமேளாவில் இந்திய நடிகர்களின் AI-உருவாக்கப்பட்ட படங்கள் அவர்களின் உண்மையான புகைப்படங்களாக தவறாகப் பகிரப்பட்ட இதேபோன்ற கூற்றுகளை ஃபேக்ட்லி நிராகரித்தது .

முடிவு : 

2025 பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் பங்கேற்றதாக மல்யுத்தம், அரசியல், சினிமா மற்றும் விளையாட்டு பிரபலங்களில் படத்தொகுப்பு வைரலானது. இதுகுறித்து ஆய்வு செய்ததில்  வைரல் படங்கள் AI-யால் உருவாக்கப்பட்டவை மற்றும் அவற்றின் நம்பகத்தன்மையை ஆதரிக்க எந்த நம்பகமான ஆதாரமும் இல்லை என்பது தெளிவாகிறது

Note : This story was originally published by ‘FACTLY’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
Advertisement