Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இயக்குநர் வெங்கட் பிரபுவின் 'சென்னை 600028' முதல் '#GOAT' வரை! - எதிர்பார்ப்பை அதிகரிக்கும் கோட்!

09:00 AM Sep 05, 2024 IST | Web Editor
Advertisement

இயக்குநர் வெங்கட் பிரபுவின் கோட் திரைப்படம் விஜய் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

தமிழ் சினிமாவில் கடந்த 2007ம் ஆண்டு 'சென்னை 600028' என்ற திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். பொதுவாகவே ஒவ்வொரு இயக்குநர்களுக்கும் ஒரு விதமான ஸ்டைல் இருக்கும். வெங்கட் பிரபுவின் படங்களில் அழுத்தமான கதை எதுவும் இருக்காது. கலகலப்பான சம்பவங்களுடன் தனது படத்தை நகர்த்திச் செயல்வதுதான் அவரின் ஸ்டைல். அந்த வகையில் வெங்கட் பிரபுவின் படங்களை எடுத்துக் கொண்டால் சென்னை 600028 படம் தொடங்கி அனைத்து படங்களிலும் ஒரு வித்தியாசத்தை காட்டியிருப்பார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான 'சென்னை 600028' திரைப்படம் மந்தைவெளி பகுதியைச் சார்ந்த கிரிக்கெட் விளையாடும் இளைஞர்களைப் பற்றிய படம் ஆகும். தனது ஒரு படத்திலேயே வெவ்வேறு ஸ்டைலை பயன்படுத்தியிருப்பார். சென்னை 600028 திரைப்படம் நகைச்சுவை கலந்த கிரிக்கெட்டை சொல்லும் விதமாக எடுக்கப்பட்டிருக்கும். இது காதல், சண்டை என அனைத்துமே கலந்து இருக்கும்.

'சரோஜா' 2008ம் ஆண்டு வெளியான தமிழ் நகைச்சுவை திகில் திரைப்படம். இத்திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்க, சிவா, வைபவ் ரெட்டி, பிரேம்ஜி அமரன், எஸ் பி பி சரண், பிரகாஷ் ராஜ் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்தனர். அடுத்ததாக 'கோவா' திரைப்படம் இளைஞர்களின் கொண்டாட்டம், பார்ட்டி ஆகியவற்றைக் கொண்டிருக்கும். பின்னர், வெங்கட் பிரபு, கார்த்தி கூட்டணியில் உருவான 'பிரியாணி' திரைப்படம் நகைச்சுவை மற்றும் திரில்லர் படமாக அமைந்திருந்தது.

இதையடுத்து, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்துடன் இணைந்து கடந்த 2011ம் ஆண்டு 'மங்காத்தா' என்ற திரைப்படத்தை உருவாக்கினார். இந்த திரைப்படம் முற்றிலும் திரில்லர் படமாக அமைந்திருந்தது. அதேபோல் சூர்யாவின் 'மாஸ் என்கிற மாசிலாமணி'
திரைப்படம் காமெடி கலந்த ஹாரர் படமாக வெங்கட் பிரபு எடுத்திருந்தார். பேய்கள் என்றாலே பயம், பயங்கரம் என்ற நினைப்பை மாற்றி, அவற்றை தோளில் கைபோட்டு நட்பு பாராட்டும் தோழர்களாகக் காட்டியிருக்கிறார் வெங்கட் பிரபு. அடுத்தடுத்து 'சென்னை 600028' இரண்டாம் பாகம், மாநாடு, கஸ்டடி போன்ற திரைப்படங்களை உருவாக்கினார்.

தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விஜய்யுடன் இணைந்து 'கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ்' திரைப்படத்தை (GOAT – Greatest Of All Times) வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். தனது முதல் திரைப்படம் முதல் வித்தியாசமான கதைகளை கொடுத்த வெங்கட் பிரபு, கோட் திரைப்படத்திலும் பலவிதமான கதைகளை கொடுத்திருப்பார் என ரசிகர்களிடையே எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பாராததை எதிர்பாருங்கள்...இதுவே இயக்குநர் வெங்கட்பிரவின் தாரக மந்திரம்.. அவரது இந்த யுக்தி #TheGoat திரைப்படத்திலும் இடம்பெறுமா?

Tags :
actorvijaychennai600028GoagoatGOATTheMovieNews7Tamilnews7TamilUpdatessarojaThalapathyTheGreatestOfAllTimeVenkatPrabhuvijayYuvanShankarraja
Advertisement
Next Article