Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நண்பேன்டா! - ரீ-ரிலீஸ் ஆகும் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’!

03:14 PM Mar 18, 2024 IST | Web Editor
Advertisement

“சிவா மனசுல சக்தி” -யை தொடர்ந்து இயக்குநர் எம். ராஜேஷின் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’  திரைப்படமும் ரீ-ரிலீஸ் ஆகிறது. 

Advertisement

சமீப காலமாகவே பாக்ஸ் ஆபிஸ் வசூலில் பட்டையை கிளப்பி,  ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற படங்கள் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன.  அந்த வகையில் இயக்குநர் எம் ராஜேஷின் இயக்கத்தில் வெளிவந்த  ‘சிவா மனசுல சக்தி’ திரைப்படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்று,  வெற்றியடைந்தது.  இந்த படமும் கடந்த சில நாட்களுக்கு முன் ரீரிலிஸ் செய்யப்பட்டது.  இதனைத்தொடர்ந்து இயக்குநர் எம் ராஜேஷ் இயக்கத்தில் வெளியான மற்றொரு வெற்றிப்படமான ‘பாஸ் என்கிற பாஸ்கரன்‘ திரைப்படமும் ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது.  வரும் 22 ஆம் தேதி,  இந்த படத்தை அமிர்தா பிலிம்ஸ் நிறுவனம் தமிழ்நாடு முழுவதும் வெளியிடுகிறது.

இயக்குநர் எம். ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யா,  நயன்தாரா,  சந்தானம் நடிப்பில்
யுவன் சங்கர் ராஜா இசையில்,  கலக்கலான ரொமான்ஸ் காமெடி ஜானரில் வெளியாது ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’.  தற்போது இயக்குநர் ராஜேஷ்  நடிகர் ஜெயம்ரவி நடிப்பில், SCREEN SCENE MEDIA தயாரிப்பில்,  ‘பிரதர்’ படத்தின் இறுதிகட்ட பணிகளில் பரபரப்பாக பணியாற்றி
வருகிறார்.  மேலும் SRI VARI FILMS ரங்கநாதன் தயாரிப்பில்,  அதர்வா மற்றும் அதிதிசங்கர் நடிக்கும்,  புதிய படம் ஒன்றையும் இயக்க உள்ளார்.  அதற்கான ஆரம்பகட்ட
முன் தயாரிப்பு பணிகளையும் தற்போது செய்துவருகிறார்.

Tags :
Anuya BhagwataryaDirector RajeshjeevaRe-RealesesanthanamSiva Manasula Sakthi
Advertisement
Next Article