திருவள்ளூர் அருகே சரக்கு ரயில் தீ விபத்து - எந்தெந்த ரயில்கள் ரத்து!
சென்னை துறைமுகத்திலிருந்து ஆயில் ஏற்றிக்கொண்டு சென்ற சரக்கு ரயில் திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே தடம் புரண்டு தீப்பிடித்து விபத்திற்குள்ளானது. இதன் காரணமாக ஆயில் டேங்கர்கள் முழுவதும் தீ பரவியது. இதனால் அப்பகுதி முழுவதும் கரும் புகை மண்டலம் போல காட்சியளித்தது.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திக்ர் வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுப்படுத்த முடியாமல் போராடினர். இதனிடையே அரக்கோணம் பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக ரயில் சேவை பாதிப்படைந்துள்ளது.
திருவள்ளூர் வழியாக செல்லும் அனைத்து ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்த கர்நாடகா, கொங்கு மண்டலத்திற்கு செல்லும் ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளது. அரக்கோணத்தில் இருந்து சென்னை வரும் அனைத்து மின்சார ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னைக்கு வந்து கொண்டிருந்த அதிவிரைவு ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது.
சென்னையிலிருந்து காலை 5.50 மணிக்கு புறப்பட வேண்டிய மைசூரு வந்தே பாரத் ரயில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.
காலை 6 மற்றும் 6.10 மணிக்கு புறப்பட வேண்டிய மைசூரு சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில், கோவை அதிவிரைவு ரயில் சென்ட்ரலில் நிறுத்தப்பட்டுள்ளது.
மங்களூரில் இருந்து காலை 6.10 மணிக்கு சென்னைக்கு வர வேண்டிய சென்ட்ரல் ரயில் திருவள்ளூரில் நிறுத்தப்பட்டுள்ளது.
நீலகிரியில் இருந்து சென்னைக்கு காலை 6.25 மணிக்கு வர வேண்டிய நீலகிரி அதிவிரைவு ரயில் திருவாலங்காட்டில் நிறுத்தப்பட்டுள்ளது.
கர்நாடகாவிலிருந்து காலை 6.45 மணிக்கு சென்னை வரவேண்டிய காவிரி விரைவு ரயில் அரக்கோணத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.
கோவையிலிருந்து காலை 7 மணிக்கு சென்னைக்கு வரவேண்டிய சேரன் அதிவிரைவு ரயில் அரக்கோணத்தில நிறுத்தப்பட்டுள்ளது. ரயில்கள் புறப்படாததால் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிகிறது.