பாஜக ஆட்சிக்கு வந்தவுடன், ராமர் கோயிலுக்கு இலவச பயணம் -மத்திய அமைச்சர் அமித்ஷா
பாஜக ஆட்சிக்கு வந்தவுடன், ராமர் கோயிலுக்கு இலவச தரிசனம் வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார்.
தெலங்கானா மாநிலம் கட்வாலில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய அமித் ஷா, வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால், தெலங்கானாவில் வசிக்கும் அனைவருக்கும் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு இலவச தரிசனத்தை உறுதி செய்யும் என்றார்.
எனவேதெலங்கானாவில் பாஜகவை தேர்வு செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தார். மேலும், கடந்த 70 ஆண்டுகளாக ராமர் கோயில் கட்டுவதற்கு காங்கிரஸ் தடையாக இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், சந்திரசேகர் ராவ் தலைமையிலான பிஆர்எஸ் அரசு மதத்தின் அடிப்படையில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியது. இது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைந்தால், மத அடிப்படையில் வழங்கப்படும் இடஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என்றும், ஓபிசி (இதர பிற்படுத்தப்பட்டோர்) மற்றும் பழங்குடியினர் (எஸ்டி) ஒதுக்கீடு அதிகரிக்கப்படும் என்றும் அமித் ஷா கூறினார்.