திமுகவை பின்பற்றும் ஆம் ஆத்மி - ஹரியானாவில் பெண்களுக்கு ரூ.1000 உதவித்தொகை அறிவிப்பு!
ஹரியானாவில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு "கெஜ்ரிவாலின் 5 கேரண்டி" என்ற பெயரில் ஆம் ஆத்மி தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது.
ஹரியானா மாநிலத்தின் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. ஹரியானாவில் ஆளும் கட்சியாக பாஜகவும், எதிர்க்கட்சியாக காங்கிரஸ் இருந்து வருகிறது. இதனிடையே ஹரியானாவின் 90 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடப் போவதாக ஆம் ஆத்மி சில நாட்களுக்கு முன்பு அறிவித்தது. இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தை இன்று தொடங்கியுள்ளது. "கெஜ்ரிவால் கேரண்டி" என்று தேர்தலுக்கான வாக்குறுதிகளை அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் வெளியிட்டார்.
‘கெஜ்ரிவாலின் 5 கேரண்டி’ என 24 மணி நேர இலவச மின்சாரம், அனைவருக்கும் இலவச மருத்துவம், குழந்தைகளுக்கு நல்ல தரமான இலவசக் கல்வி, வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை, பெண்களுக்கு மாதம் ரூ.1,000 ஆகிய உத்தரவாதங்களை ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் சிங் மற்றும் பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் ஆகியோருடன் சேர்ந்து சுனிதா கெஜ்ரிவால் வெளியிட்டார்.