Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#Haryana | இன்று முதல் சிறுநீரக நோயாளிகளுக்கு ‘இலவச’ டயாலிசிஸ் சிகிச்சை!

07:39 PM Oct 18, 2024 IST | Web Editor
Advertisement

ஹரியானாவில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நாள்பட்ட சிறுநீரக நோயாளிகளுக்கு இலவச டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் நயாப் சைனி அறிவித்துள்ளார்.

Advertisement

ஹரியானாவில் கடந்த 5ம் தேதி நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அபார வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 90 தொகுதிகளில் பாஜக 48 இடங்களை கைப்பற்றியது. இதனையடுத்து 2வது முறையாக, ஹரியானா மாநில முதலமைச்சராக நயாப் சிங் சைனி பதவியேற்றார். இந்த நிலையில், பாஜகவின் முதல் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், ஹரியானாவில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நாள்பட்ட சிறுநீரக நோயாளிகளுக்கு இலவச டயாலிசிஸ் சேவை வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் நயாப் சிங் சைனி தெரிவித்தார்.

இது தொடர்பாக ஹரியானா மாநில முதலமைச்சர் நயாப் சிங் சைனி செய்தியாளர்களிடம் கூறியதாவது,

"முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு நான் கோப்பில் முதலில் கையெழுத்திட்டது சிறுநீரக நோயாளிகள் தொடர்பானதுதான். ஹரியானாவில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நாள்பட்ட சிறுநீரக நோயாளிகளுக்கு இன்று முதல் இலவச டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்படும். தேர்தலில் நாங்கள் இந்த வாக்குறுதியை அளித்தோம். டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ள நோயாளிகளுக்கு மாதம் ரூ.20,000 முதல் ரூ.25,000 வரை செலவு ஏற்படுகிறது. இப்போது, ஹரியானா அரசு அந்த செலவை ஏற்கும்."

இவ்வாறு ஹரியானா மாநில முதலமைச்சர் நயாப் சிங் சைனி தெரிவித்துள்ளார்.

Tags :
BJPDialysisharyanaHaryana CMNayab Singh Saininews7 tamil
Advertisement
Next Article