For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இலவச பேருந்து பயண திட்டம் - எக்ஸ்பிரஸ், சொகுசு பேருந்துகளிலும் விரிவாக்கம் செய்ய அரசு திட்டம்!

07:40 AM May 03, 2024 IST | Jeni
இலவச பேருந்து பயண திட்டம்   எக்ஸ்பிரஸ்  சொகுசு பேருந்துகளிலும் விரிவாக்கம் செய்ய அரசு திட்டம்
Advertisement

மகளிர் இலவச பேருந்து பயண திட்டத்தை, அனைத்து வகை பேருந்துகளுக்கும் விரிவாக்கம் செய்ய தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement

கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன், அவர் கையெழுத்திட்ட ஐந்து கோப்புகளில் ஒன்று மகளிர் இலவச பேருந்து பயண திட்டத்திற்கானது. மே 7-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டு, அடுத்த நாளான மே 8-ம் தேதியே இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தது.

அன்றைய தினம் முதல் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் இயங்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் மகளிருக்கு இலவச பேருந்து பயணம் வழங்கப்பட்டு வருகிறது. தொடக்கத்தில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தாலும், பின்னர் இந்த திட்டத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிட்டியது. தமிழ்நாடு முழுவதும் லட்சக்கணக்கான மகளிர் நாள்தோறும் இந்த திட்டத்தை பயன்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில், இந்த மகளிர் இலவச பேருந்து பயண திட்டத்தை, அனைத்து வகை பேருந்துகளுக்கும் விரிவாக்கம் செய்ய தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதற்கட்டமாக, இந்த விரிவாக்க திட்டத்தை சென்னையில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : இறுதி வரை போராடிய ராஜஸ்தான் - 1 ரன் வித்தியாசத்தில் ஹைதரபாத் த்ரில் வெற்றி!

இதற்காக எக்ஸ்பிரஸ் மற்றும் சொகுசு பேருந்துகளில் தினமும் பயணிக்கும் பெண்களின் எண்ணிக்கை குறித்து கணக்கெடுப்பு பணி தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இப்பணி முடிந்ததும் சென்னையில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் மற்றும் சொகுசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டம் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
Advertisement