மகளிர் மற்றும் திருநங்கைகளுக்கு கட்டணமில்லா பேருந்து பயணம் - தெலங்கானாவில் இன்று முதல் அமல்.!
தெலங்கானாவில் மகளிர் மற்றும் திருநங்கைகளுக்கு கட்டணமில்லா பேருந்து பயண திட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.
தெலங்கானாவின் 119 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நவம்பர் 30-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் பதிவான வாக்குகள் டிசம்பர் 3-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தெலங்கானாவில் பெரும்பான்மைக்கு தேவை 61 இடங்கள். இந்நிலையில்,தெலங்கானா தேர்தலில் காங்கிரஸ் கட்சி 64 இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்று தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியமைத்தது.
இதனைத் தொடர்ந்து தெலங்கானா முதல்வராக மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ரேவந்த் ரெட்டி முதலமைச்சராக பதவியேற்றார். இதனைத் தொடர்ந்து தெலங்கானா காங்கிரஸின் மூத்த தலைவர்களான பட்டி விக்ரமார்க்க மல்லு துணை முதலமைச்சராகவும் , தெலங்கானா காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் உத்தம் குமார் ரெட்டி உள்ளிட்ட 12 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.