"மாணவர்களுக்கு இலவச 'பஸ் பாஸ்' திட்டம்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
மாணவர்களுக்கு இலவச 'பஸ் பாஸ்' வழங்கும் திட்டத்தை விழிப்போடு கண்காணித்து, சிறப்பாகச் செயல்படுத்திட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
12:43 PM Sep 12, 2025 IST | Web Editor
Advertisement
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "சட்டமன்ற உறுப்பினராக, 1989-இல் எனது முதல் உரையே மாணவர்களுக்கு இலவச 'பஸ் பாஸ்' வழங்க வேண்டும் என்பதுதான்.
Advertisement
அதனை ஏற்றுக்கொண்டு, முதலமைச்சராக இருந்த கருணாநிதி செயல்படுத்திய அத்திட்டம் நாட்டுக்கே வழிகாட்டியது. அதன் தொடர்ச்சியாக, தற்போது மாணவர் மட்டும் சிறப்புப் பேருந்துகளை நமது திராவிட மாடல் ஆட்சியில் இயக்கி வருகிறோம்.
அமைச்சர் சிவசங்கரும் போக்குவரத்துத் துறை அதிகாரிகளும் இத்திட்டத்தின் செயல்பாட்டைத் தொடர்ந்து விழிப்போடு கண்காணித்து, மேலும் மேலும் சிறப்பாகச் செயல்படுத்திட வேண்டும் என வாழ்த்துகிறேன்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.