Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பெண்களுக்கு இலவச பேருந்து வசதிக்கு எதிர்ப்பு - தெலங்கானாவில் முதலமைச்சர் அலுவலகம் முன் ஆட்டோவுக்கு தீ வைத்த நபர்!

01:55 PM Feb 02, 2024 IST | Web Editor
Advertisement

தெலங்கானாவில், “எங்கள் பிழைப்பில் மண்ணை அள்ளி போட்டு விட்டது” என்று முதலமைச்சர் அலுவலகம் எதிரே ஓட்டுநர் ஒருவர் ஆட்டோவுக்கு தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

தெலங்கானாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு,  காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபின் மகாலட்சுமி என்ற பெயரில் பெண்களுக்கு இலவச பேருந்து வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. சொகுசு பேருந்துகளை தவிர மற்ற அனைத்து அரசு பேருந்துகளிலும் பெண்கள் தெலுங்கானா மாநில முழுவதும் இலவசமாக பயணம் செய்யலாம். அரசின் மகாலட்சுமி திட்டம் காரணமாக, தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருப்பதாக ஆட்டோ ஓட்டுநர்கள், டாக்ஸி ஓட்டுனர்கள் ஆகியோர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், தேவா என்ற ஆட்டோ ஓட்டுநர் நேற்று மாலை ஹைதராபாத்தில் உள்ள முதலமைச்சர் அலுவலகம் எதிரே மகாலட்சுமி திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தன்னுடைய ஆட்டோவிற்கு தீ வைத்தார்.  உடனே அங்கிருந்த போலீசார் உடனடியாக தீயணைப்பு வாகனத்திற்கு தகவல் அளித்து வரவழைத்து எரிந்து கொண்டிருந்த தீயை கட்டுப்படுத்தி அணைத்தனர்.  மதுபோதையில் இருந்ததாக கூறப்படும் ஆட்டோ ஓட்டுநர் தேவாவை போலீசார் அவருடைய
உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

Tags :
Chief Minister OfficeCMO TelanganaCongressFree Buses For WomenRevanth ReddyTelangana
Advertisement
Next Article