Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

திண்டுக்கலில் ஐடி அதிகாரி எனக் கூறி பண மோசடி: கார் ஓட்டுநர் கைது!

10:35 AM Jul 04, 2024 IST | Web Editor
Advertisement

திண்டுக்கலில் ஐடி அதிகாரி எனக்  கூறி பண மோசடியில் ஈடுபட்ட ஆக்டிங் டிரைவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

Advertisement

திண்டுக்கல் நாட்டாண்மைக்கார தெரு பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் குமார். இவர் தேனி நாடாளுமன்ற தேர்தலின் போது வருமானவரித்துறை புலனாய்வு பிரிவில் ஆக்டிங் டிரைவராக பணி புரிந்துள்ளார்.

இதையடுத்து விக்னேஷ் என்பவர் மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள பல்வேறு தொழிலதிபர்கள் மற்றும் நகைக்கடை உரிமையாளர்களுக்கு கைபேசியில் தொடர்பு கொண்டு ஐடி ரெய்டு வரவுள்ளதாகவும், தனக்கு பணம் கொடுத்தால் ஐடி ரெய்டு வராது தான் வருமானவரித்துறை ஊழியர் என கூறி மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதையும் படியுங்கள் : 5 முக்கிய பிரச்னைகளை மக்களவை கன்னிப்பேச்சில் குறிப்பிட்ட துரை வைகோ!

இந்நிலையில், இவர் நேற்று முன்தினம் மதுரையில் உள்ள நகைக்கடைகளுக்கும், தேனியில் உள்ள மருத்துவமனை, கம்பத்தில் உள்ள உணவகம் ஆகிய பகுதிகளுக்கு கைபேசி மூலம் அழைத்து செய்து ஐடி ரெய்டு நடைபெற உள்ளதாக கூறி பணம் கேட்டுள்ளார்.

இது தொடர்பாக வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு உதவி இயக்குநர் புஷ்பராஜ் என்பவர் அளித்த புகாரின்கீழ் மதுரை விளக்குத்தூண் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.  இதையடுத்து. விக்னேஷ்குமாரை கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.இந்நிலையில், வருமானவரித்துறை அதிகாரிகள் என கூறி தொழிலதிபர்களை போன் மூலமாக மிரட்டிய வழக்கில் ஆக்டிங் டிரைவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
Acting driverarrestedDindigulfraudIT officerPolice
Advertisement
Next Article