For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தல் - புதுச்சேரியில் இன்று வாக்குப்பதிவு!

09:29 AM Jun 30, 2024 IST | Web Editor
பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தல்   புதுச்சேரியில் இன்று வாக்குப்பதிவு
Advertisement

புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு துணைத்தூதரகத்தில் பிரான்ஸ் பாராளுமன்ற
தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Advertisement

பிரான்ஸ நாட்டின் பாராளுமன்றம் கடந்த ஜூன் 9ம் தேதி கலைக்கப்பட்டு தேர்தல்
அறிவிக்கப்பட்டது, பாராளுமன்ற தேர்தல் இன்றும், ஜூலை 7 ஆம் தேதி என 2
சுற்றுகளாக நடைபெறுகிறது.

பிரான்ஸ் பாராளுமன்றத்தில் உள்ள 577 தொகுதிகளில் ஆசியநாடுகளுக்கான ஒரு
தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று இந்தியாவிலும் டெல்லி, பெங்களூர், மும்பை,
கொல்கத்தா, தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் நடைபெறுகிறது.

தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் உள்ள பிரெஞ்சு குடியுரிமை
பெற்றவர்கள் வாக்களிக்கும் வகையில் நான்கு வாக்குப்பதிவு மையங்கள் புதுச்சேரி
மற்றும் சென்னைக்கான பிரெஞ்சு தூதரகத்தின் சார்பில் புதுச்சேரி, சென்னை
மற்றும் காரைக்கால் பகுதிகளில் அமைக்கப்பட்டு இன்று வாக்குப்பதிவு
நடைபெறுகிறது.

காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் இந்த வாக்குப்பதிவில் 4,550 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ள நிலையில், புதுச்சேரிபிரெஞ்சு துணைத்தூதரகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் தங்களது வாக்கினை பதிவு செய்து வருகின்றனர். இந்த ஆசிய நாடுகளின் தொகுதிக்கு முதல் சுற்று தேர்தலில் 15 வேட்பாளர்கள்களத்தில் உள்ளார்கள்.

Tags :
Advertisement