Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கருக்கலைப்பு உரிமையை சட்டமாக்கிய முதல் நாடு என்ற பெருமையை பெற்றது பிரான்ஸ்!

08:34 AM Mar 05, 2024 IST | Web Editor
Advertisement

கருக்கலைப்பு உரிமையை சட்டமாக்கிய முதல் நாடு என்கிற பெருமையை பிரான்ஸ் நாடு பெற்றுள்ளது.

அமெரிக்காவில் பெண்களின் கருக்கலைப்பு உரிமைகளை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.  இதற்கு நாடு முழுவதும் பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியது.  இதனைத் தொடர்ந்து பிரான்சில் பெண்களின் கருக்கலைப்பு உரிமைகள் நிலைநாட்டப்படும் என பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உறுதி அளித்தார்.

Advertisement

பிரான்ஸ் அரசாங்கம் அரசியலமைப்பின் 34 வது பிரிவான "கருக்கலைப்புக்கு பெண்களின் சுதந்திரத்தைப் பயன்படுத்துவதற்கான நிபந்தனைகளை சட்டம் தீர்மானிக்கும்” என்கிற சட்டம் திருத்தப்பட வேண்டும் என தெரிவித்திருந்தது.

அதன்படி பெண்களின் கருக்கலைப்பு உரிமை தொடர்பான மசோதா பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.   அமெரிக்காவில் பெண்களின் கருகலைப்பு உரிமைகளை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் காரணமாக கருக்கலைப்பு உரிமைக்கு அச்சுறுத்தல் இருப்பதாக பிரான்ஸ் அரசாங்கம் இந்த மசோதாவை தாக்கல் செய்த போது குறிப்பிட்டிருந்தது.

மேலும், பிரான்ஸ் மட்டுமல்லாமல் ஐரோப்பா நாடுகள் உள்ளிட்ட பல நாடுகளில் இந்த கோரிக்கை தொடர்பான கருத்துக்கள் இருந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.  இந்த மசோதா நாடாளுமன்றத்தின் கீழ்சபையில் நிறைவேறியது.  இதன்பிறகு இந்த மசோதா செனட் சபைக்கு அனுப்பப்படட்டது.

இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற செனட் சபையிலும் இந்த மசோதா பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. கருக்கலைப்பு உரிமை மசோதாவிற்கு 780 வாக்குகள் கிடைத்தன. இதனை எதிர்த்து 72பேர் வாக்களித்த நிலையில் இந்த சட்டம் பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. இதன் மூலம் உலகிலேயே கருக்கலைப்பு உரிமை சட்டத்தை நிறைவேற்றிய முதல் நாடு என்கிற பெருமையை பெருகிறது பிரான்ஸ்.

Tags :
AbortionAbortion LawsAbortion RightsConstitutional RightsFrance
Advertisement
Next Article