நான்காவது டி20 : வாஷிங்டன் சுந்தர் அசத்தல் - ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி...!
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 2-1 என்ற அடிப்படையில் ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா கைப்பற்றிய நிலையில் டி20 போட்டிகள் துவங்கியுள்ளன. அதன் படி முதலாவது ஆட்டம் மழையால் பாதியில் ரத்தானது. 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும், 3-வது ஆட்டத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றதால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.
இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 4-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று ஹெரிடேஜ் பேங்க் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில், 8 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் குவித்துள்ளது. இதனை தொடர்ந்து 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 18.2 ஓவர்களில் 119 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது.
ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமாக மிட்சல் மார்ஷ் 30 ரன்களும், மேட் ஷார்ட் 25 ரன்களும் சேர்த்தனர். இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும் ஷிவம் டூபே மற்றும் அக்சார் பட்டேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதன் மூலம் இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன், 5 பேட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.