Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

INDIA கூட்டணியின் 4வது கூட்டம் - டிச. 19 அன்று டெல்லி செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

09:13 PM Dec 15, 2023 IST | Web Editor
Advertisement

டெல்லியில் நடைபெற உள்ள I.N.D.I.A கூட்டணியின் 4-வது ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வரும் டிச.19 ம் தேதி  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்கிறார் .

Advertisement

2024 மக்களவைத் தோ்தலில் ஆளும் பாஜகவுக்கு எதிராக எதிா்க்கட்சிகள் ஒருங்கிணைந்து ‘இந்தியா’ கூட்டணியை உருவாக்கியுள்ளன. காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாடி உள்ளிட்ட பிரதான எதிா்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் ‘இந்தியா’ கூட்டணியின் முதல் மூன்று ஆலோசனைக் கூட்டங்கள் முறையே பாட்னா, பெங்களூரு, மும்பை ஆகிய நகரங்களில் நடைபெற்றன.

தெலங்கானா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மத்தியப் பிரதேச தலைநகா் போபாலில் இந்தியா கூட்டணியின் நான்காவது கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் கூட்டணி கட்சிகளின் முக்கியத் தலைவர்களான மம்தா பானர்ஜி,  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நிதிஷ் குமார், அகிலேஷ் யாதவ் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்க முடியாத சூழல் நிலவியதால் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து  இந்தியா கூட்டணி கட்சிகளின் நான்காவது கூட்டம் நடைபெறும் விவரங்களை காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்  டெல்லியில் டிசம்பர் 19-ஆம் தேதி மாலை 3 மணிக்கு நடைபெறும் என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் டெல்லியில் நடைபெற உள்ள I.N.D.I.A கூட்டணியின் 4-வது ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வரும் டிச.19 ம் தேதி காலை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்கிறார் என  அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Tags :
CMO TamilNaduDMKINDIA AllianceMK Stalin
Advertisement
Next Article