For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பள்ளிப்பேருந்தில் சிக்கி 4 வயது சிறுமி உயிரிழப்பு! விதிகளை காற்றில் பறக்கவிட்ட பள்ளி நிர்வாகத்தால் பறிபோன உயிர்!

09:43 PM Nov 27, 2023 IST | Web Editor
பள்ளிப்பேருந்தில் சிக்கி 4 வயது சிறுமி உயிரிழப்பு  விதிகளை காற்றில் பறக்கவிட்ட பள்ளி நிர்வாகத்தால் பறிபோன உயிர்
Advertisement

கோத்தகிரி பகுதியில் தனியார் பள்ளி பேருந்து ஏறியதில், எல்கேஜி படிக்கும் மாணவி நிகழ்விடத்திலேயே உயிரிழந்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே கேர்க்கம்பை பகுதியில் ஹில்போர்ட் மெட்ரிக் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் கூக்கல்தொரை பகுதியை சேர்ந்த ரவி மற்றும் சோபனா. இவர்களது மகள் லயா (4) எல்கேஜி படித்து வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம் போல் இன்று காலை பள்ளி பேருந்தில் லயா பள்ளிக்கு சென்று விட்டு, மீண்டும் மாலை பள்ளி பேருந்து மூலம் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது லயாவை  பள்ளி பேருந்து ஓட்டுநர் இறக்கி விட்டதாக கூறப்படுகிறது.

பள்ளி பேருந்தில் இருந்து இறங்கிய லயா பேருந்திற்கு பின்புறம் இருந்ததை
கவனிக்காமல் ஓட்டுநர் பேருந்தை பின்னோக்கி இயக்கியுள்ளார். அப்போது பள்ளிப் பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி சிறுமி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். தற்போது, கோத்தகிரி காவல்துறையினர் இவ்விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், முதற்கட்ட விசாரணையில் அந்த பள்ளி பேருந்தில் ஓட்டுநர் மட்டுமே இருந்ததாகவும், உதவியாளர் இல்லை என்பதும் தெரிய வந்துள்ளது. பள்ளிப்பேருந்தில் உதவியாளர் கட்டாயமாக இருக்க வேண்டும் என்பது போன்ற விதிமுறைகளை பின்பற்றாத பள்ளிகளின் அலட்சியத்தால் சிறுமி இறந்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
Advertisement