Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கேரளா | நூலிழையில் வாகன விபத்திலிருந்து தப்பிய பெண் - பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்!

01:30 PM Dec 15, 2024 IST | Web Editor
Advertisement

கேரள மாநிலம் பாறசாலை அருகே வாகன விபத்தில் நூலிழையில் பெண் ஒருவர் உயிர்த்தப்பினார். இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Advertisement

கேரள மாநிலம் பாறசாலை-திருவனந்தபுரம் சாலையில் செங்கவில் பகுதியில் வாகனம் ஒன்று வந்து கொண்டிருந்தது. அதிவேகமாக நேரே வந்து கொண்டிருந்த அந்த வாகனத்தின் ஓட்டிநர் கட்டுப்பாட்டை இழந்ததால், வலது புறமாகத் திரும்பியது. இதனால் அந்த சாலை ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றின் மீது மோதி எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்திற்கு முன்னதாக அந்த சாலையில் நடந்து வந்து கொண்டிருந்த பெண் ஒருவர் மொபைல் போன் பார்த்துக்கொண்டே வந்து கொண்டிருந்தார். ஆனால், அப்பெண் அதிர்ஷ்டவசமாக திடீரென சாலையில் நின்றுவிட்டார். இதனால் அப்பெண்ணிற்கு எவ்வித காயமும் இன்றி உயிர் பிழைத்தார்.

விபத்தின் போது அப்பகுதியில் இருந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக சென்று விபத்து ஏற்படுத்தி கவிழ்ந்த காரில் இருந்து நபர் ஒருவரை மீட்க முயன்றனர். அப்போது வாகனத்தில் இருர்ந்த நபர் வேகமாக காரை விட்டு குதித்துத் தப்பிச் சென்றார். எதிர்பாராத விதமாக ஏற்பட்ட இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை. இந்த விபத்து குறித்த சிசிடிவி கேரமா வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags :
CaraccidentKeralaNews7Tamilnews7TamilUpdatesViral
Advertisement
Next Article