For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#Formula4 கார் பந்தயம் - கொடியசைத்து தொடங்கி வைத்தார் அமைச்சர் #UdhayanidhiStalin!

07:37 PM Aug 31, 2024 IST | Web Editor
 formula4 கார் பந்தயம்   கொடியசைத்து தொடங்கி வைத்தார் அமைச்சர்  udhayanidhistalin
Advertisement

ஃபார்முலா 4 கார் பந்தயத்தின் இன்றைய பயிற்சி போட்டிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

Advertisement

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தனியார் அமைப்பு இணைந்து சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த பந்தயம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற இருந்த நிலையில், மிக்ஜாம் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று (ஆக. 31) மற்றும் நாளை (செப் 1) சென்னை தீவுத்திடலைச் சுற்றி 3.5 கிமீ தூரத்திற்கு ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெறுகிறது.

3.7 கி.மீ. தொலைவு கொண்ட பார்முலா 4 கார் பந்தய சா்க்யூட், தீவுத்திடலில் தொடங்கி, போர் நினைவுச் சின்னம், நேப்பியர் பாலம் , சுவாமி சிவானந்தா சாலை, அண்ணா சாலை ஆகியவற்றின் வழியே மீண்டும் தீவுத்திடலில் நிறைவடைகிறது. பந்தயத்தின் பயிற்சி சுற்று, இன்று பிற்பகல் 2.30 முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவதாக இருந்தாது. ஆனால் மழையின் காரணமாக அவை தள்ளிவைக்கப்பட்டன.

இந்நிலையில், தற்போது ஃபார்முலா 4 கார் பந்தய பாதுகாப்பு சோதனைகள் நடைபெற்றன. மாலை 6 மணிக்குள் FIA சான்றிதழ் கிடைத்த நிலையில் மாலை 7மணிக்கு பயிற்சி போட்டிகள் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டது. மேலும் கார் பந்தயத்தின் பயிற்சி போட்டிகள் இரவு 7 மணிக்கு தொடங்கி 10.45 மணி வரை நடைபெறவுள்ளதாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் பயிற்சி போட்டிகளை தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Tags :
Advertisement